• Apr 15 2025

தலதா மாளிகையில் குவியும் இராணுவத்தினர் - விசேட பாதுகாப்பு

Chithra / Apr 13th 2025, 2:57 pm
image

 

தலதா மாளிகையில் புனித தந்த தாது தரிசனத்திற்கு வருகை தரும் மக்களின் பாதுகாப்பிற்காக பொலிஸாருக்கு மேலதிகமாக இராணுவத்தினரையும் பாதுகாப்பிற்கு ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தலதா மாளிகையில் புனித தந்த தாது தரிசனம் 18 - 27 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.

மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள அனைத்து இராணுவப் பிரிவுகளும் இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் இதற்காகப் பயன்படுத்தப்படுமென தெரிக்கப்படுகின்றது.

இந்நிலையில் வரலாற்று சிறப்புமிக்க மகா கதிர்காமம் ஆலயத்தை இன்று (13) மாலை 6 மணி முதல் மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் செய்யப்படும் சடங்குகளுக்காக கோயில் மூடப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, நாளை (14) மதியம் 1 மணிக்கு பூஜை சேவைகளுக்காக கோயில் மீண்டும் திறக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தலதா மாளிகையில் குவியும் இராணுவத்தினர் - விசேட பாதுகாப்பு  தலதா மாளிகையில் புனித தந்த தாது தரிசனத்திற்கு வருகை தரும் மக்களின் பாதுகாப்பிற்காக பொலிஸாருக்கு மேலதிகமாக இராணுவத்தினரையும் பாதுகாப்பிற்கு ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.தலதா மாளிகையில் புனித தந்த தாது தரிசனம் 18 - 27 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள அனைத்து இராணுவப் பிரிவுகளும் இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் இதற்காகப் பயன்படுத்தப்படுமென தெரிக்கப்படுகின்றது.இந்நிலையில் வரலாற்று சிறப்புமிக்க மகா கதிர்காமம் ஆலயத்தை இன்று (13) மாலை 6 மணி முதல் மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் செய்யப்படும் சடங்குகளுக்காக கோயில் மூடப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.அதன்படி, நாளை (14) மதியம் 1 மணிக்கு பூஜை சேவைகளுக்காக கோயில் மீண்டும் திறக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement