• Nov 14 2024

கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் வெளியான அறிவிப்பு..!

Sharmi / Nov 6th 2024, 9:38 am
image

ஆன்லைன் முறையில் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளும் முறை இன்று (06) முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக  குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, www.immigration.gov.lk என்ற இணைப்பின் ஊடாக வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை பெறுவதற்கான திகதியை முன்பதிவு செய்துகொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வெளிநாட்டு கடவுச்சீட்டுகளின் பற்றாக்குறை காரணமாக, தினசரி வழங்கப்படும் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டதால், கடந்த சில மாதங்களாக திணைக்களத்தின் கொழும்பு தலைமை அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்களுக்கு அருகில் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன.

இம்மாதம் தொடர்பான திகதிகளை முன்பதிவு செய்யும் நடவடிக்கைகள் தற்போது நிறைவடைந்துள்ளதால், இன்று முதல் இணையத்தில் திகதிகளை முன்பதிவு செய்பவர்களுக்கு அடுத்த மாத தொடக்கத்தில் இருந்து திகதிகளை வழங்க முடியும் என குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் பதில் கட்டுப்பாட்டாளர் நாயகம் நிலுஷா பாலசூரிய தெரிவித்துள்ளார்.

அதேவேளை, திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்யாமல் திணைக்களத்திற்குச் சென்று கடவுச்சீட்டைப் பெற முடியாது என குடிவரவுத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கொழும்பில் உள்ள குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு முன்பாக நேற்று மக்கள் வரிசையில் காத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் வெளியான அறிவிப்பு. ஆன்லைன் முறையில் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளும் முறை இன்று (06) முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக  குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.அதன்படி, www.immigration.gov.lk என்ற இணைப்பின் ஊடாக வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை பெறுவதற்கான திகதியை முன்பதிவு செய்துகொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,வெளிநாட்டு கடவுச்சீட்டுகளின் பற்றாக்குறை காரணமாக, தினசரி வழங்கப்படும் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டதால், கடந்த சில மாதங்களாக திணைக்களத்தின் கொழும்பு தலைமை அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்களுக்கு அருகில் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன.இம்மாதம் தொடர்பான திகதிகளை முன்பதிவு செய்யும் நடவடிக்கைகள் தற்போது நிறைவடைந்துள்ளதால், இன்று முதல் இணையத்தில் திகதிகளை முன்பதிவு செய்பவர்களுக்கு அடுத்த மாத தொடக்கத்தில் இருந்து திகதிகளை வழங்க முடியும் என குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் பதில் கட்டுப்பாட்டாளர் நாயகம் நிலுஷா பாலசூரிய தெரிவித்துள்ளார்.அதேவேளை, திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்யாமல் திணைக்களத்திற்குச் சென்று கடவுச்சீட்டைப் பெற முடியாது என குடிவரவுத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.இந்நிலையில், கொழும்பில் உள்ள குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு முன்பாக நேற்று மக்கள் வரிசையில் காத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement