• Sep 20 2024

ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா! samugammedia

Tamil nila / Dec 3rd 2023, 9:02 am
image

Advertisement

ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா நிகழ்வு கடந்த 29.11.2023 அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.



கொடி ஏற்றி வைக்கப்பட்டு, மேற்கத்தேய இசை வாத்தியங்கள் முழங்க விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டு மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது.

பின்னர் விருந்தினர்களின் உரைகள், மாணவர்களது கலை நிகழ்வுகள், பரிசளிப்பு வைபவம் என்பன இடம்பெற்றன.



கல்லூரியின் அதிபர் அருட்திரு எம்.அன்ரன் அமலதாஸ் அவர்களது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மறைமாவட்ட குரு முதல்வர் அருட்கலாநிதி பி.ஜே.ஜெபரட்ணம் அவர்களும், சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண மின்சார சபையின் பிரதம பொறியியலாளர் ஜேசுதாசன் அமலேந்திரன் அவர்களும், கௌரவ விருந்தினராக தீவக கல்வி வலயத்தின் கல்வி முகாமைத்துவ பிரதிக் கல்விப் பணிப்பாளர் அவர்களும் கலந்து சிறப்பித்ததுடன், இந்த நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள், அயற்பாடசாலை அதிபர்கள், அயற்பாடசாலை ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டனர்.




ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா samugammedia ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா நிகழ்வு கடந்த 29.11.2023 அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.கொடி ஏற்றி வைக்கப்பட்டு, மேற்கத்தேய இசை வாத்தியங்கள் முழங்க விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டு மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது.பின்னர் விருந்தினர்களின் உரைகள், மாணவர்களது கலை நிகழ்வுகள், பரிசளிப்பு வைபவம் என்பன இடம்பெற்றன.கல்லூரியின் அதிபர் அருட்திரு எம்.அன்ரன் அமலதாஸ் அவர்களது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மறைமாவட்ட குரு முதல்வர் அருட்கலாநிதி பி.ஜே.ஜெபரட்ணம் அவர்களும், சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண மின்சார சபையின் பிரதம பொறியியலாளர் ஜேசுதாசன் அமலேந்திரன் அவர்களும், கௌரவ விருந்தினராக தீவக கல்வி வலயத்தின் கல்வி முகாமைத்துவ பிரதிக் கல்விப் பணிப்பாளர் அவர்களும் கலந்து சிறப்பித்ததுடன், இந்த நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள், அயற்பாடசாலை அதிபர்கள், அயற்பாடசாலை ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement