வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவும், நிறுவுனர் நினைவு நாளும் நேற்றையதினம்(09) கல்லூரியின் திறந்தவெளி அரங்கில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
ஆரம்ப நிகழ்வாக கல்லூரியில் அமைக்கப்பெற்றுள்ள சரஸ்வதி சிலைக்கு விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
அதனைத் தொடர்ந்து தேசியக்கொடி, பாடசாலைக் கொடி என்பன ஏற்றி வைக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து விருந்தினர்கள் மேற்கத்தேய இசை வாத்தியங்கள் முழங்க அரங்கிற்கு அழைத்து வரப்பட்டு, மங்கல விளக்கு ஏற்றி வைக்கப்பட்டதுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
அதனைத் தொடர்ந்து வரவேற்பு நடனம், ஆசியுரை, தலைமையுரை, விருந்தினர்கள் உரை, மாணவர்களது கலை நிகழ்ச்சிகள் மற்றும் பரிசில்கள் வழங்கல் என்பன நடைபெற்றன.
கல்லூரியின் முதல்வர் லங்கா பிரதீபன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உயர் படிப்புகள் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் தி.வேல்நம்பி, சிறப்பு விருந்தினராக திருகோணமலை கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளர் நே.விஷ்ணுதாசன் கலந்து சிறப்பித்ததுடன், ஆசியுரையை வீணாகான குரு பீடத்தின் குரு முதல்வர் சிவஸ்ரீ சபா வாசுதேவக்குருக்களும், நிறுவுநர் நினைவுப் பேருரையை கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியின் விரிவுரையாளர் நா.அம்பிகைபாகனும் ஆற்றியிருந்தனர்.
இந்த பரிசளிப்பு விழா நிகழ்வில் விருந்தினர்கள், கல்லூரியின் முதல்வர், ஆசிரியர்கள், அயற்பாடசாலை அதிபர்கள், அயற்பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், கல்வி சாரா ஊழியர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா. வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவும், நிறுவுனர் நினைவு நாளும் நேற்றையதினம்(09) கல்லூரியின் திறந்தவெளி அரங்கில் வெகு சிறப்பாக நடைபெற்றது.ஆரம்ப நிகழ்வாக கல்லூரியில் அமைக்கப்பெற்றுள்ள சரஸ்வதி சிலைக்கு விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.அதனைத் தொடர்ந்து தேசியக்கொடி, பாடசாலைக் கொடி என்பன ஏற்றி வைக்கப்பட்டன.அதனைத் தொடர்ந்து விருந்தினர்கள் மேற்கத்தேய இசை வாத்தியங்கள் முழங்க அரங்கிற்கு அழைத்து வரப்பட்டு, மங்கல விளக்கு ஏற்றி வைக்கப்பட்டதுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.அதனைத் தொடர்ந்து வரவேற்பு நடனம், ஆசியுரை, தலைமையுரை, விருந்தினர்கள் உரை, மாணவர்களது கலை நிகழ்ச்சிகள் மற்றும் பரிசில்கள் வழங்கல் என்பன நடைபெற்றன.கல்லூரியின் முதல்வர் லங்கா பிரதீபன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உயர் படிப்புகள் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் தி.வேல்நம்பி, சிறப்பு விருந்தினராக திருகோணமலை கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளர் நே.விஷ்ணுதாசன் கலந்து சிறப்பித்ததுடன், ஆசியுரையை வீணாகான குரு பீடத்தின் குரு முதல்வர் சிவஸ்ரீ சபா வாசுதேவக்குருக்களும், நிறுவுநர் நினைவுப் பேருரையை கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியின் விரிவுரையாளர் நா.அம்பிகைபாகனும் ஆற்றியிருந்தனர்.இந்த பரிசளிப்பு விழா நிகழ்வில் விருந்தினர்கள், கல்லூரியின் முதல்வர், ஆசிரியர்கள், அயற்பாடசாலை அதிபர்கள், அயற்பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், கல்வி சாரா ஊழியர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.