• Nov 17 2024

வருடாந்திர காலநிலை உச்சி மாநாடு அசர்பைஜானில் ஆரம்பம்!

Tamil nila / Nov 11th 2024, 8:34 pm
image

ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்திர காலநிலை உச்சி மாநாடு ஆரம்பமாகியுள்ளது. 

 COP 29 என அழைக்கப்படும் இந்த மாநாடு தொடர்ச்சியாக இரண்டு வாரங்களுக்கு நடைபெறவுள்ளது. 

 எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடான அசர்பைஜானின் தலைநகரான பாக்குவில் நடைபெறும் இந்த ஒன்று கூடலில் சுமார் 200 உலக தலைவர்கள் பங்குபற்றவுள்ளனர். 

 எதிர்காலத்தில் சர்வதேசத்திற்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய துரித நடவடிக்கைகள் குறித்து உலக தலைவர்கள் விரிவாக விவாதிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 குறிப்பாகக் கடந்த 2015 பாரிஸ் ஒப்பந்தத்தின் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 1.5 சென்றிகிரேட் வெப்பநிலை உயர்வைக் கட்டுப்படுத்த நாடுகள் எவ்வாறு திட்டமிடுகின்றன என்பது குறித்து விசேட கவனம் செலுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

 ஒன்பது வருடங்களுக்கு முன்னர், இடம்பெற்ற காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் சட்டபூர்வ சர்வதேச ஒப்பந்தம் 200இற்கும் மேற்பட்ட நாடுகளினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 

 இந்த ஒப்பந்தத்திற்கு அமைய 2 சென்ரிகிரேட்டிற்கு, குறிப்பாக 1.5 சென்றிகிரேட் ஆக வைத்திருக்க இணக்கம் காணப்பட்டது. 

 அதேவேளை ஐக்கிய நாடுகளின் உலக வானிலை அமைப்பு 2024 ஆம் ஆண்டு உலகின் வெப்பமான ஆண்டாகப் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. 

 இந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலப்பகுதியில், உலக சராசரி வெப்பநிலை 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்ததை விட 1.54 சென்றிகிரேட்டினால் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. 


வருடாந்திர காலநிலை உச்சி மாநாடு அசர்பைஜானில் ஆரம்பம் ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்திர காலநிலை உச்சி மாநாடு ஆரம்பமாகியுள்ளது.  COP 29 என அழைக்கப்படும் இந்த மாநாடு தொடர்ச்சியாக இரண்டு வாரங்களுக்கு நடைபெறவுள்ளது.  எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடான அசர்பைஜானின் தலைநகரான பாக்குவில் நடைபெறும் இந்த ஒன்று கூடலில் சுமார் 200 உலக தலைவர்கள் பங்குபற்றவுள்ளனர்.  எதிர்காலத்தில் சர்வதேசத்திற்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய துரித நடவடிக்கைகள் குறித்து உலக தலைவர்கள் விரிவாக விவாதிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  குறிப்பாகக் கடந்த 2015 பாரிஸ் ஒப்பந்தத்தின் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 1.5 சென்றிகிரேட் வெப்பநிலை உயர்வைக் கட்டுப்படுத்த நாடுகள் எவ்வாறு திட்டமிடுகின்றன என்பது குறித்து விசேட கவனம் செலுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.  ஒன்பது வருடங்களுக்கு முன்னர், இடம்பெற்ற காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் சட்டபூர்வ சர்வதேச ஒப்பந்தம் 200இற்கும் மேற்பட்ட நாடுகளினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.  இந்த ஒப்பந்தத்திற்கு அமைய 2 சென்ரிகிரேட்டிற்கு, குறிப்பாக 1.5 சென்றிகிரேட் ஆக வைத்திருக்க இணக்கம் காணப்பட்டது.  அதேவேளை ஐக்கிய நாடுகளின் உலக வானிலை அமைப்பு 2024 ஆம் ஆண்டு உலகின் வெப்பமான ஆண்டாகப் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.  இந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலப்பகுதியில், உலக சராசரி வெப்பநிலை 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்ததை விட 1.54 சென்றிகிரேட்டினால் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement