யா/ பருத்தித்துறை கலட்டி றோமன் கத்தேலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் மாணவர் பாராளுமன்றம் அமர்வு பாடசாலை அதிபரும், மாணவர் பாராளுமன்ற செயலாளர் நாயகமுமான அரவிந்தன் தலைமையில் காலை 10:30 மணியளவில் ஆரம்பமானது.
முதல் நிகழ்வாக விருந்தினர்கள் பாண்ட் இசை அணிவகுப்புடன், மலர்மாலை அணிவிக்கப்பட்டு அழைத்துவரப்பட்டு தேசியக்கொடி, பாடசாலை கொடிகள் ஏற்றப்பட்டு மங்கள விளக்கேற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது.
அதனை தொடர்ந்து மாணவர் பாராளுமன்ற செயலாளர் நாயகமும், பாடசாலை அதிபருமான அரவிந்தன் தலைமையில் தெரிவு செய்யப்பட்ட மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களிலிருந்து சபாநாயகராக பிலிப்குமார் பிரவீன் தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, சபாநாயகர் தலமையில் பாராளுமன்ற அமர்வு இடம்பெற்றது.
இதில் அருள்ஞானமணி அருள்நிதேசன் பிரதமராகவும், அன்ரன் பிரேமதாஸ். அன்ரன் ஜெனதாஸ் சபை முதல்வராகவும், றொசாந்தன் றொமோசன் மாணவர் மேம்பாடு மற்றும் மாணவர் நலன்புரி அமைச்சராகவும், வினோத்பிரேம் தருஸ்சன் மாணவர் மாணவர் திறன், மற்றும் புத்தாக்க அமைச்சராகவும், ரவிக்குமார் ரஞ்சித்குமார் பாடசாலைகளுக்கிடையிலான நட்புறவு அமைச்சராகவும், அன்ரனிக் பதுவைதாசன் கல்வி மனிதவள தொடர்பாளர் அமைச்சராகவும், அல்பிரட்நிக்சன் கபிஷன் பண்பாடு சமய அலுவல்கள் மேம்பாட்டு அமைச்சராகவும், அன்ரன் ஜெயக்குமார் கனுசன்குமார் சமூக நல்லிணக்க மற்றும் மாணவர்கள் பாதுகாப்பு அமைச்சராகவும், றாஜீவன் யாழ்நிலவன் சமுதாய தொடர்பு அபிவிருத்தி மற்றும் சமுதாய தொடர்பு அமைச்சராகவும், சுரேஸ்குமார் சுவேதன் சுகாதாரம் போஷாக்கு மற்றும் விளையாட்டு துறை அமைச்சராகவும்,
சுஜித்குமார் சுஜிதரன் விவசாயம், மற்றும் சூழல் அபிவிருத்தி அமைச்சராகவும், அன்ரன் இருதயராஜ் அன்ரன் சுரேன் பௌதீக வள அபிவிருத்தி மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சராகவும் தெரிவு செய்யப்பட்டு சபாநாயகரால் நியமன கடிதங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
தொடர்ந்து அமைச்சர்கள் தமது பிரேரணைகளை முன்வைத்ததுடன் அடுத்த அமர்விற்கான திகதி தீர்மானிக்கப்பட்டு அமர்வு நிறைவடைந்தது.
இதில் பிரதம விருந்தினராக வடமராட்சி கல்வி வலய சமூக விஞ்ஞான பாட வளவாளரும், ஆசிரிய ஆலோசகருமான எஸ்.எம் கண்ணகுமார் பிரதம விருந்தினராக கலந்துகொண்டதுடன் அயல் பாடசாலை அதிபர்கள், மாணவர்களும், பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பருத்தித்துறை கலட்டி றோ.க.த.க பாடசாலையில் மாணவர் பாராளுமன்றம். யா/ பருத்தித்துறை கலட்டி றோமன் கத்தேலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் மாணவர் பாராளுமன்றம் அமர்வு பாடசாலை அதிபரும், மாணவர் பாராளுமன்ற செயலாளர் நாயகமுமான அரவிந்தன் தலைமையில் காலை 10:30 மணியளவில் ஆரம்பமானது.முதல் நிகழ்வாக விருந்தினர்கள் பாண்ட் இசை அணிவகுப்புடன், மலர்மாலை அணிவிக்கப்பட்டு அழைத்துவரப்பட்டு தேசியக்கொடி, பாடசாலை கொடிகள் ஏற்றப்பட்டு மங்கள விளக்கேற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது.அதனை தொடர்ந்து மாணவர் பாராளுமன்ற செயலாளர் நாயகமும், பாடசாலை அதிபருமான அரவிந்தன் தலைமையில் தெரிவு செய்யப்பட்ட மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களிலிருந்து சபாநாயகராக பிலிப்குமார் பிரவீன் தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, சபாநாயகர் தலமையில் பாராளுமன்ற அமர்வு இடம்பெற்றது.இதில் அருள்ஞானமணி அருள்நிதேசன் பிரதமராகவும், அன்ரன் பிரேமதாஸ். அன்ரன் ஜெனதாஸ் சபை முதல்வராகவும், றொசாந்தன் றொமோசன் மாணவர் மேம்பாடு மற்றும் மாணவர் நலன்புரி அமைச்சராகவும், வினோத்பிரேம் தருஸ்சன் மாணவர் மாணவர் திறன், மற்றும் புத்தாக்க அமைச்சராகவும், ரவிக்குமார் ரஞ்சித்குமார் பாடசாலைகளுக்கிடையிலான நட்புறவு அமைச்சராகவும், அன்ரனிக் பதுவைதாசன் கல்வி மனிதவள தொடர்பாளர் அமைச்சராகவும், அல்பிரட்நிக்சன் கபிஷன் பண்பாடு சமய அலுவல்கள் மேம்பாட்டு அமைச்சராகவும், அன்ரன் ஜெயக்குமார் கனுசன்குமார் சமூக நல்லிணக்க மற்றும் மாணவர்கள் பாதுகாப்பு அமைச்சராகவும், றாஜீவன் யாழ்நிலவன் சமுதாய தொடர்பு அபிவிருத்தி மற்றும் சமுதாய தொடர்பு அமைச்சராகவும், சுரேஸ்குமார் சுவேதன் சுகாதாரம் போஷாக்கு மற்றும் விளையாட்டு துறை அமைச்சராகவும், சுஜித்குமார் சுஜிதரன் விவசாயம், மற்றும் சூழல் அபிவிருத்தி அமைச்சராகவும், அன்ரன் இருதயராஜ் அன்ரன் சுரேன் பௌதீக வள அபிவிருத்தி மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சராகவும் தெரிவு செய்யப்பட்டு சபாநாயகரால் நியமன கடிதங்கள் வழங்கிவைக்கப்பட்டன.தொடர்ந்து அமைச்சர்கள் தமது பிரேரணைகளை முன்வைத்ததுடன் அடுத்த அமர்விற்கான திகதி தீர்மானிக்கப்பட்டு அமர்வு நிறைவடைந்தது.இதில் பிரதம விருந்தினராக வடமராட்சி கல்வி வலய சமூக விஞ்ஞான பாட வளவாளரும், ஆசிரிய ஆலோசகருமான எஸ்.எம் கண்ணகுமார் பிரதம விருந்தினராக கலந்துகொண்டதுடன் அயல் பாடசாலை அதிபர்கள், மாணவர்களும், பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.