• Dec 09 2024

சாரதியின் கவன குறைவால் கர்ப்பிணித்தாய்க்கு ஏற்பட்ட நிலை..!

Sharmi / Nov 5th 2024, 5:31 pm
image

சாரதியின் கவன குறைவால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறிய ரக பார ஊர்தி ஒன்று மதகில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் கர்ப்பிணித்தாய் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா நோர்வூட் பிரதான பாதையில் வைத்தியசாலைக்கு முன்பாக இன்று(05) மதியம் இடம்பெற்றுள்ளது.

சாரதி தனது மனைவியை வாகனத்தில் நிறுத்திவிட்டு சென்ற வேளையில் வாகனம் நகர்ந்து குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் சம்பவம் நிகழும் போது கர்ப்பிணித் தாய் வாகனத்தில் அமர்ந்திருந்தாகவும், வாகனத்தின் தடையினை போடாததனால் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளன.

குறித்த விபத்தில் கர்ப்பிணித் தாய்க்கு சிறிய காயங்கள் ஏற்பட்ட நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சாரதியின் கவன குறைவால் கர்ப்பிணித்தாய்க்கு ஏற்பட்ட நிலை. சாரதியின் கவன குறைவால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறிய ரக பார ஊர்தி ஒன்று மதகில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் கர்ப்பிணித்தாய் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.இச்சம்பவம் நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா நோர்வூட் பிரதான பாதையில் வைத்தியசாலைக்கு முன்பாக இன்று(05) மதியம் இடம்பெற்றுள்ளது.சாரதி தனது மனைவியை வாகனத்தில் நிறுத்திவிட்டு சென்ற வேளையில் வாகனம் நகர்ந்து குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் சம்பவம் நிகழும் போது கர்ப்பிணித் தாய் வாகனத்தில் அமர்ந்திருந்தாகவும், வாகனத்தின் தடையினை போடாததனால் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளன.குறித்த விபத்தில் கர்ப்பிணித் தாய்க்கு சிறிய காயங்கள் ஏற்பட்ட நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement