தங்காலை - விதாரந்தெனிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போலி இலக்கத்தகடு பொருத்தப்பட்ட சொகுசு வாகனம் ஒன்று மாத்தறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த சொகுசு வாகனத்தின் உரிமையாளர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எம்பிலிப்பிட்டிய - பல்லேகம பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சொகுசு வாகனம் மூன்றரை கோடி ரூபா பெறுமதியானது என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சொகுசு வாகனம் களுத்துறை பிரதேசத்தில் உள்ள அரசியல்வாதி ஒருவரின் சகோதரர் மூலமாக குறித்த வர்த்தகருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
மூன்றரை கோடி ரூபா பெறுமதியான மற்றுமொரு சொகுசு வாகனம் மீட்பு - வர்த்தகர் கைது தங்காலை - விதாரந்தெனிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போலி இலக்கத்தகடு பொருத்தப்பட்ட சொகுசு வாகனம் ஒன்று மாத்தறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளது.இந்த சொகுசு வாகனத்தின் உரிமையாளர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். எம்பிலிப்பிட்டிய - பல்லேகம பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த சொகுசு வாகனம் மூன்றரை கோடி ரூபா பெறுமதியானது என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.இந்த சொகுசு வாகனம் களுத்துறை பிரதேசத்தில் உள்ள அரசியல்வாதி ஒருவரின் சகோதரர் மூலமாக குறித்த வர்த்தகருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.