யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மணியன் தோட்ட பகுதியில் அமைந்துள்ள பிரதேச உப தபால் நிலையம் ஒன்றில் வாக்காளர்களுக்கு வழங்கப்படாமல் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர் அட்டைகள் தேங்கி கிடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
குறித்த தபால் நிலையத்தில் கடமையாற்றிய உத்தியோகத்தர் ஒருவர் வாக்காளர் அட்டைகளை வழங்கும்போது விதிமுறைகளை மீறி நடந்து கொண்டமையால் கடமையிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த உப அஞ்சல் நிலையத்தில் பதிலீடு எவரும் நியமிக்கப்படாத நிலையில் வாக்காளர் அட்டைகள் வாக்காளர்களுக்கு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள உப தபால் நிலையத்தில் கடமையாற்றிய உத்தியோகத்தர் ஒருவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்ட காரணத்தால் குறித்த தடங்கல் ஏற்பட்டுள்ளது என வடமாகாண பிரதி அஞ்சல் மா அதிபர் தெரிவித்தார்.
கடந்த 08ம் திகதியுடன் வாக்காளர் அட்டை விநியோகம் செய்யும் காலம் முடிவடைந்த நிலையில் தற்போது எமது உத்தியோகத்தர்களால் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் அரசாங்க அதிபருடன் கலந்துரையாடி தேர்தல் செயலகத்தின் அனுமதியுடன் வழங்குவதற்குரிய ஏற்பாடுகளை ஆராய்ந்து வருகிறோம்.
வாக்காளர் அட்டைகள் கிடைக்காதவர்கள் நேரடியாக குறித்த தபால் நிலையத்துக்குச் சென்று தமது வாக்காளர் அட்டைகளை பெற்றுக் கொள்ளலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.
யாழ். தபால் நிலையத்தில் தேங்கிக்கிடக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர் அட்டைகள் வாக்காளர் மத்தியில் குழப்பம் யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மணியன் தோட்ட பகுதியில் அமைந்துள்ள பிரதேச உப தபால் நிலையம் ஒன்றில் வாக்காளர்களுக்கு வழங்கப்படாமல் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர் அட்டைகள் தேங்கி கிடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.குறித்த தபால் நிலையத்தில் கடமையாற்றிய உத்தியோகத்தர் ஒருவர் வாக்காளர் அட்டைகளை வழங்கும்போது விதிமுறைகளை மீறி நடந்து கொண்டமையால் கடமையிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் குறித்த உப அஞ்சல் நிலையத்தில் பதிலீடு எவரும் நியமிக்கப்படாத நிலையில் வாக்காளர் அட்டைகள் வாக்காளர்களுக்கு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. குறித்த பகுதியில் உள்ள உப தபால் நிலையத்தில் கடமையாற்றிய உத்தியோகத்தர் ஒருவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்ட காரணத்தால் குறித்த தடங்கல் ஏற்பட்டுள்ளது என வடமாகாண பிரதி அஞ்சல் மா அதிபர் தெரிவித்தார்.கடந்த 08ம் திகதியுடன் வாக்காளர் அட்டை விநியோகம் செய்யும் காலம் முடிவடைந்த நிலையில் தற்போது எமது உத்தியோகத்தர்களால் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.குறித்த விடயம் தொடர்பில் அரசாங்க அதிபருடன் கலந்துரையாடி தேர்தல் செயலகத்தின் அனுமதியுடன் வழங்குவதற்குரிய ஏற்பாடுகளை ஆராய்ந்து வருகிறோம். வாக்காளர் அட்டைகள் கிடைக்காதவர்கள் நேரடியாக குறித்த தபால் நிலையத்துக்குச் சென்று தமது வாக்காளர் அட்டைகளை பெற்றுக் கொள்ளலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.