ஏடன் வளைகுடாவில் ஆளில்லா விமானம் அல்லது ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளானதாகக் கூறப்படும் வணிகக் கப்பலுக்கு இந்தியக் கடற்படை முக்கிய உதவிகளை வழங்கியுள்ளது.
இந்த தாக்குதலில் குறைந்தது ஒரு பணியாளர் காயம் அடைந்ததாகவும், தாக்குதலுக்கு பின்னர் கப்பல் தீப்பிடித்ததாகவும் இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலுக்கு பின்னர் கிடைத்த பேரிடர் அழைப்பை அடுத்து விரைவாக பதிலளித்த இந்திய கடற்படை தாக்குதலுக்கு இலக்கான MV Islander கப்பலை நோக்கி மீட்பு குழு ஒன்றை அனுப்பியுள்ளது.
இந்த மாத தொடக்கத்தில், 11 ஈரானிய மற்றும் 8 பாகிஸ்தானிய பிரஜைகளை ஏற்றிச் சென்ற ஈரானியக் கொடியுடன் கூடிய மீன்பிடிக் கப்பலை சோமாலியாவில் கடற்கொள்ளையர் கடத்துவதற்கு மேற்கொண்ட முயற்சியை இந்திய கடற்படையினர் முறியடித்தனர்.
ஜனவரி மாதம், கடற்கொள்ளையர்களால் குறிவைக்கப்பட்ட ஈரானின் கொடியுடன் பயணித்த மீன்பிடிக் கப்பலில் இருந்த 19 பாகிஸ்தான் பணியாளர்களை இந்திய போர்க்கப்பல் மீட்டது.
இப்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இந்திய கடற்படை முன்னணி கப்பல்கள் மற்றும் கண்காணிப்பு விமானங்களை அனுப்பியுள்ளது.
ஏடன் வளைகுடாவில் மற்றுமொரு கப்பல் மீது தாக்குதல். ஏடன் வளைகுடாவில் ஆளில்லா விமானம் அல்லது ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளானதாகக் கூறப்படும் வணிகக் கப்பலுக்கு இந்தியக் கடற்படை முக்கிய உதவிகளை வழங்கியுள்ளது.இந்த தாக்குதலில் குறைந்தது ஒரு பணியாளர் காயம் அடைந்ததாகவும், தாக்குதலுக்கு பின்னர் கப்பல் தீப்பிடித்ததாகவும் இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தாக்குதலுக்கு பின்னர் கிடைத்த பேரிடர் அழைப்பை அடுத்து விரைவாக பதிலளித்த இந்திய கடற்படை தாக்குதலுக்கு இலக்கான MV Islander கப்பலை நோக்கி மீட்பு குழு ஒன்றை அனுப்பியுள்ளது.இந்த மாத தொடக்கத்தில், 11 ஈரானிய மற்றும் 8 பாகிஸ்தானிய பிரஜைகளை ஏற்றிச் சென்ற ஈரானியக் கொடியுடன் கூடிய மீன்பிடிக் கப்பலை சோமாலியாவில் கடற்கொள்ளையர் கடத்துவதற்கு மேற்கொண்ட முயற்சியை இந்திய கடற்படையினர் முறியடித்தனர்.ஜனவரி மாதம், கடற்கொள்ளையர்களால் குறிவைக்கப்பட்ட ஈரானின் கொடியுடன் பயணித்த மீன்பிடிக் கப்பலில் இருந்த 19 பாகிஸ்தான் பணியாளர்களை இந்திய போர்க்கப்பல் மீட்டது.இப்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இந்திய கடற்படை முன்னணி கப்பல்கள் மற்றும் கண்காணிப்பு விமானங்களை அனுப்பியுள்ளது.