• Sep 08 2024

கிழக்கு ஆளுநரின் ஏற்பாட்டில் மூதூர் பாடசாலையில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்வு..!

Sharmi / Jul 15th 2024, 2:54 pm
image

Advertisement

மூதூர் கல்வி அலுவலகப் பிரிவிலுள்ள உயர்தர மாணவர்களுக்கு போதைப் பொருள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு கிழக்கு மாகாண ஆளூநர் செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் மூதூர் -சேனையூர் மத்திய கல்லூரியில் இன்று (15) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பாடசாலை மாணவிகளால் அழைத்துவரப்பட்டு ,பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

அத்தோடு மூதூர்- சேனையூர் மத்திய கல்லூரியின் குறைபாடுகள் தொடர்பாகவும் பாடசாலை சமூகத்துடன் கேட்டறிந்து கொண்டார். 

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப் பொருள் விற்பனை இடம்பெற்று வருகிறது.

இதனால் கிழக்கு மாகாண பாடசாலைகளில் போதைப் பொருள் தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளோம்.

போதைப் பொருள் பாவனையால் ஏற்படுகின்ற பாதிப்புகள், விற்பனை செய்பவர்களை இனம் கண்டு யாருக்கு தகவல் வழங்குவது தொடர்பாக பாடசாலை மாணவர்களுக்கு விழிப்பூட்டும் நிகழ்வை கிழக்கு மாகாண ரீதியில் ஆரம்பித்துள்ளோம் என்று தெரிவித்தார். 

இதில் 350 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். 

இதில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் திருமதி சுஜாதா,மூதூர் வலயக் கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கிழக்கு ஆளுநரின் ஏற்பாட்டில் மூதூர் பாடசாலையில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்வு. மூதூர் கல்வி அலுவலகப் பிரிவிலுள்ள உயர்தர மாணவர்களுக்கு போதைப் பொருள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு கிழக்கு மாகாண ஆளூநர் செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் மூதூர் -சேனையூர் மத்திய கல்லூரியில் இன்று (15) இடம்பெற்றது.இந்நிகழ்வில் கலந்து கொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பாடசாலை மாணவிகளால் அழைத்துவரப்பட்டு ,பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார். அத்தோடு மூதூர்- சேனையூர் மத்திய கல்லூரியின் குறைபாடுகள் தொடர்பாகவும் பாடசாலை சமூகத்துடன் கேட்டறிந்து கொண்டார். இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப் பொருள் விற்பனை இடம்பெற்று வருகிறது. இதனால் கிழக்கு மாகாண பாடசாலைகளில் போதைப் பொருள் தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளோம். போதைப் பொருள் பாவனையால் ஏற்படுகின்ற பாதிப்புகள், விற்பனை செய்பவர்களை இனம் கண்டு யாருக்கு தகவல் வழங்குவது தொடர்பாக பாடசாலை மாணவர்களுக்கு விழிப்பூட்டும் நிகழ்வை கிழக்கு மாகாண ரீதியில் ஆரம்பித்துள்ளோம் என்று தெரிவித்தார். இதில் 350 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் திருமதி சுஜாதா,மூதூர் வலயக் கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement