• Nov 06 2024

திருக்கோணேஸ்வரர் ஆலய சூழலில் சமூக விரோத செயற்பாடுகள்- சபையில் குகதாசன் எம்.பி சுட்டிக்காட்டு...!

Sharmi / Aug 6th 2024, 5:36 pm
image

Advertisement

வரலாற்றுச் சிறப்பு மிக்க திருக்கோணேஸ்வரர் ஆலய சூழலில் அமைந்துள்ள கடைகளை வேறு ஒரு தகுந்த இடத்திற்கு மாற்றுவதற்கு விரைந்து நடவடிக்கையினை முன்னெடுக்குமாறு தமிழரசுக் கட்சின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ச.குகதாசன் பாராளுமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்றையதினம்(06)  இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

திருக்கோணேச்சரம்  வரலாற்று புகழ்மிக்க ஒரு புனிதத் தலம்.  இக்கோவிலுக்கு பெருமளவு சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இவர்கள் இந்த இடத்தின் அழகைக் கண்டு களிக்க விரும்புகின்றனர்.

சட்ட விரோதமாகக் கட்டப்பட்ட கடைகள் இதற்குத் தடையாக உள்ளன.

மேலும் இக்கடைகளினால் கோவிலின் புனிதத் தன்மை கெடுவதோடு இங்கு சில சமூக விரோதச் செயற்பாடுகளும் இடம்பெறுகின்றன.

எனவே இக்கடைகளை வேறு ஒரு தகுந்த இடத்திற்கு மாற்ற வேண்டும் என 2019 மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது.

எனினும் இம்முடிவு இது வரையிலும்  செயற்படுத்தப்பட வில்லை இந்த முடிவை விரைந்து செயற்படுத்த ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டார்.

திருக்கோணேஸ்வரர் ஆலய சூழலில் சமூக விரோத செயற்பாடுகள்- சபையில் குகதாசன் எம்.பி சுட்டிக்காட்டு. வரலாற்றுச் சிறப்பு மிக்க திருக்கோணேஸ்வரர் ஆலய சூழலில் அமைந்துள்ள கடைகளை வேறு ஒரு தகுந்த இடத்திற்கு மாற்றுவதற்கு விரைந்து நடவடிக்கையினை முன்னெடுக்குமாறு தமிழரசுக் கட்சின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ச.குகதாசன் பாராளுமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.இன்றையதினம்(06)  இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.திருக்கோணேச்சரம்  வரலாற்று புகழ்மிக்க ஒரு புனிதத் தலம்.  இக்கோவிலுக்கு பெருமளவு சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இவர்கள் இந்த இடத்தின் அழகைக் கண்டு களிக்க விரும்புகின்றனர். சட்ட விரோதமாகக் கட்டப்பட்ட கடைகள் இதற்குத் தடையாக உள்ளன. மேலும் இக்கடைகளினால் கோவிலின் புனிதத் தன்மை கெடுவதோடு இங்கு சில சமூக விரோதச் செயற்பாடுகளும் இடம்பெறுகின்றன. எனவே இக்கடைகளை வேறு ஒரு தகுந்த இடத்திற்கு மாற்ற வேண்டும் என 2019 மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது. எனினும் இம்முடிவு இது வரையிலும்  செயற்படுத்தப்பட வில்லை இந்த முடிவை விரைந்து செயற்படுத்த ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement