• Oct 09 2024

சாய்ந்தமருதில் அநுரவுக்கு ஆதரவாக திரண்ட மக்கள்...!

Sharmi / Sep 14th 2024, 4:04 pm
image

Advertisement

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருதில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திசாநாயக்கவுக்கு ஆதரவு தெரிவித்து மாபெரும் பிரச்சார கூட்டம் நேற்றையதினம்(13) மாலை இடம்பெற்றது.

வளமான நாடு- அழகான வாழ்க்கையினை உருவாக்கிக் கொடுக்கின்ற புதிய மறுமலர்ச்சிப் பாதைக்கு நாட்டை இட்டுச் செல்கின்ற 2024 ஜனாதிபதித் தேர்தலின் பெருவெற்றிக்காக  அதிகளவான மக்கள் இப்பிரச்சார கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

இதன் போது  ஜனாதிபதி வேட்பாளர்  அனுர குமார  திசாநாயக்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் முகமாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த பியதிஸ்ஸ உட்பட  கல்முனைத் தொகுதி அமைப்பாளர் ஆதம்பாவா மற்றும்  தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து இக்கூட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தமை  குறிப்பிடத்தக்கது.

மேலும் இது தவிர அக்கரைப்பற்று, நிந்தவூர், சம்மாந்துறை, அம்பாறை நகரப் பகுதிகளிலும் இவ்வாறான பிரசார கூட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றதுடன் அதிகளவான மக்களும் கலந்து கொண்டிருந்தனர்.



சாய்ந்தமருதில் அநுரவுக்கு ஆதரவாக திரண்ட மக்கள். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருதில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திசாநாயக்கவுக்கு ஆதரவு தெரிவித்து மாபெரும் பிரச்சார கூட்டம் நேற்றையதினம்(13) மாலை இடம்பெற்றது.வளமான நாடு- அழகான வாழ்க்கையினை உருவாக்கிக் கொடுக்கின்ற புதிய மறுமலர்ச்சிப் பாதைக்கு நாட்டை இட்டுச் செல்கின்ற 2024 ஜனாதிபதித் தேர்தலின் பெருவெற்றிக்காக  அதிகளவான மக்கள் இப்பிரச்சார கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.இதன் போது  ஜனாதிபதி வேட்பாளர்  அனுர குமார  திசாநாயக்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் முகமாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த பியதிஸ்ஸ உட்பட  கல்முனைத் தொகுதி அமைப்பாளர் ஆதம்பாவா மற்றும்  தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து இக்கூட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தமை  குறிப்பிடத்தக்கது.மேலும் இது தவிர அக்கரைப்பற்று, நிந்தவூர், சம்மாந்துறை, அம்பாறை நகரப் பகுதிகளிலும் இவ்வாறான பிரசார கூட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றதுடன் அதிகளவான மக்களும் கலந்து கொண்டிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement