• Nov 28 2024

முன்னைய அரசின் வாடகை வருமான வரி திட்டத்தை கைவிட அநுர அரசு தீர்மானம்

Chithra / Oct 20th 2024, 12:34 pm
image


முன்னைய அரசாங்கம் முன்மொழிந்த  வாடகை வருமான வரி திட்டத்தை கைவிடுவதற்கு தற்போதைய அரசாங்கம் தீர்மானித்துள்ளது என திறைசேரியின் பிரதிசெயலாளர் ஆர்எம்பி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் முன்மொழிந்த  வாடகை வருமான வரி திட்டத்தை மாற்றீடு செய்வதற்காக புதிய யோசனைகள் குறித்து ஆராய்ந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

முன்னைய அரசாங்கத்தின் யோசனையை தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்காது என அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த மதிப்பாய்வில் சமர்ப்பிப்பதற்காக அரசாங்கம் பல மாற்று யோசனைகளை ஆராய்ந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் புதிய திட்டங்களை முன்வைக்கவேண்டும் என சர்வதேச நாணயநிதியம் எதிர்பாப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணயநிதியத்தின் அடுத்த- மூன்றாவது மதிப்பாய்விற்கான திகதி இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

முன்னைய அரசின் வாடகை வருமான வரி திட்டத்தை கைவிட அநுர அரசு தீர்மானம் முன்னைய அரசாங்கம் முன்மொழிந்த  வாடகை வருமான வரி திட்டத்தை கைவிடுவதற்கு தற்போதைய அரசாங்கம் தீர்மானித்துள்ளது என திறைசேரியின் பிரதிசெயலாளர் ஆர்எம்பி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.அரசாங்கம் முன்மொழிந்த  வாடகை வருமான வரி திட்டத்தை மாற்றீடு செய்வதற்காக புதிய யோசனைகள் குறித்து ஆராய்ந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.முன்னைய அரசாங்கத்தின் யோசனையை தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்காது என அவர் தெரிவித்துள்ளார்.சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த மதிப்பாய்வில் சமர்ப்பிப்பதற்காக அரசாங்கம் பல மாற்று யோசனைகளை ஆராய்ந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.அரசாங்கம் புதிய திட்டங்களை முன்வைக்கவேண்டும் என சர்வதேச நாணயநிதியம் எதிர்பாப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.சர்வதேச நாணயநிதியத்தின் அடுத்த- மூன்றாவது மதிப்பாய்விற்கான திகதி இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement