இந்திய எதிர்ப்புக் கொள்கையிலிருந்த மக்கள் விடுதலை முன்னணிக்கு பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது அவரை எவ்வாறு எதிர்கொள்வது என்பதே தற்போது பெரும் நெருக்கடியாகவுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்திய எதிர்ப்புக் கொள்கையிலிருந்தவர்கள், இந்தியாவுக்கு எதிராக மனிதப் படுகொலைகளைச் செய்தவர்கள் தற்போது பாரிய நெருக்கடிக்குள்ளாகியிருக்கின்றனர்.
அடுத்த வாரம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு விஜயம் செய்யும் போது அவருடன் சென்று எவ்வாறு சம்பூர் மின் உற்பத்தி நிலையத்தை திறந்து வைப்பது என்பதே அவர்களுக்குள்ள தற்போதைய பிரச்சினையாகும்.
சில சந்தர்ப்பங்களில் சம்பூருக்கு செல்லாமலும் விடலாம். அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரல் என்ன என்பது எமக்கு தெரியாது.
பொருளாதார ரீதியிலான இராஜதந்திர உறவுகளிலிருந்து விலகி, ஆணவம் கொண்ட பேச்சுக்களால் தற்போது இந்தியாவுடனுள்ள நட்புறவையும் பகைத்துக் கொள்ளும் செயற்பாடுகளையே அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. மூடிய பொருளாதாரம் கொண்ட சிறிய நாடுகளால் அபிவிருத்தியடைய முடியாது.என்றார்.
பிரதமர் மோடியை எதிர்கொள்ள தயங்கும் அநுர அரசு - ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டு இந்திய எதிர்ப்புக் கொள்கையிலிருந்த மக்கள் விடுதலை முன்னணிக்கு பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது அவரை எவ்வாறு எதிர்கொள்வது என்பதே தற்போது பெரும் நெருக்கடியாகவுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இந்திய எதிர்ப்புக் கொள்கையிலிருந்தவர்கள், இந்தியாவுக்கு எதிராக மனிதப் படுகொலைகளைச் செய்தவர்கள் தற்போது பாரிய நெருக்கடிக்குள்ளாகியிருக்கின்றனர்.அடுத்த வாரம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு விஜயம் செய்யும் போது அவருடன் சென்று எவ்வாறு சம்பூர் மின் உற்பத்தி நிலையத்தை திறந்து வைப்பது என்பதே அவர்களுக்குள்ள தற்போதைய பிரச்சினையாகும்.சில சந்தர்ப்பங்களில் சம்பூருக்கு செல்லாமலும் விடலாம். அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரல் என்ன என்பது எமக்கு தெரியாது. பொருளாதார ரீதியிலான இராஜதந்திர உறவுகளிலிருந்து விலகி, ஆணவம் கொண்ட பேச்சுக்களால் தற்போது இந்தியாவுடனுள்ள நட்புறவையும் பகைத்துக் கொள்ளும் செயற்பாடுகளையே அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. மூடிய பொருளாதாரம் கொண்ட சிறிய நாடுகளால் அபிவிருத்தியடைய முடியாது.என்றார்.