முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சகாக்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களால் நடத்திச் செல்லப்பட்ட மதுபானசாலைகளால் வழங்கப்படவுள்ள 7 பில்லியன் ரூபா வரிப்பணத்தை வசூலிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, வருடத்துக்கு 250 - 300 அனுமதிப்பத்திரங்களை வழங்கி அதிலிருந்து கிடைக்கும் வரி வருமானத்தின் ஊடாக வர்த்தகத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுத்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.
நாட்டு மக்களின் வரிப்பணத்தில் தனது ஓய்வு காலத்தை கழித்துக் கொண்டிருக்கும் ஒருவர் இவ்வாறு நையாண்டிக் கருத்தினை வெளியிடுவது பொறுத்தமற்றது.
மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களை வழங்குவது சாதாரண விடயமல்ல. இவ்வாறு அனுமதி பத்திரங்களை வழங்கியதன் மூலம் மக்களால் கொள்வனவு செய்யப்பட்ட மதுபான போத்தல்களால் கிடைக்கப் பெற்ற வரிப்பணத்தை சேமிப்பதற்கும் இந்த அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மதுபான போத்தல்களை விற்பனை செய்தமையால் மதுபானசாலை உரிமையாளர்கள் பெற்றுக் கொண்ட வருமானத்துக்கான வரி சுங்கத் திணைக்களத்துக்கு வழங்கப்படவில்லை.
இவ்வாறு இதுவரை செலுத்தப்படாமலுள்ள வரியைப் பெறுவதற்கான நடவடிக்கைகளையே நாம் முன்னெடுத்திருக்கின்றோம்.
அலோசியசுக்கு சொந்தமான 3 நிறுவனங்களின் அனுமதிப்பத்திரங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
செலுத்தப்படாமலுள்ள வரித்தொகைக்கு பதிலாக அவர்களது சொத்துக்களை அரசுடைமையாக்க முடியும் என்று சட்டத்திலிருந்தால் அதற்குரிய நடவடிக்கையும் முன்னெடுக்கப்படும்.
ஆனால் துரதிஷ்டவசமாக அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்வதற்கான ஏற்பாடுகள் மாத்திரமே சட்டத்தில் காணப்படுகின்றன.
மேலும் நிறுவனங்களின் செயற்பாடுகள் செயலிழந்துள்ளன. தேவையேற்படின் அவற்றுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். என்றார்.
ரணிலின் சகாக்களின் மதுபானசாலைகளிலிருந்து 7 பில்லியன் ரூபா வரிப்பணத்தை வசூலிக்க அநுர அரசு நடவடிக்கை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சகாக்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களால் நடத்திச் செல்லப்பட்ட மதுபானசாலைகளால் வழங்கப்படவுள்ள 7 பில்லியன் ரூபா வரிப்பணத்தை வசூலிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவிக்கையில்,முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, வருடத்துக்கு 250 - 300 அனுமதிப்பத்திரங்களை வழங்கி அதிலிருந்து கிடைக்கும் வரி வருமானத்தின் ஊடாக வர்த்தகத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுத்ததாகக் குறிப்பிட்டிருந்தார். நாட்டு மக்களின் வரிப்பணத்தில் தனது ஓய்வு காலத்தை கழித்துக் கொண்டிருக்கும் ஒருவர் இவ்வாறு நையாண்டிக் கருத்தினை வெளியிடுவது பொறுத்தமற்றது. மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களை வழங்குவது சாதாரண விடயமல்ல. இவ்வாறு அனுமதி பத்திரங்களை வழங்கியதன் மூலம் மக்களால் கொள்வனவு செய்யப்பட்ட மதுபான போத்தல்களால் கிடைக்கப் பெற்ற வரிப்பணத்தை சேமிப்பதற்கும் இந்த அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.மதுபான போத்தல்களை விற்பனை செய்தமையால் மதுபானசாலை உரிமையாளர்கள் பெற்றுக் கொண்ட வருமானத்துக்கான வரி சுங்கத் திணைக்களத்துக்கு வழங்கப்படவில்லை. இவ்வாறு இதுவரை செலுத்தப்படாமலுள்ள வரியைப் பெறுவதற்கான நடவடிக்கைகளையே நாம் முன்னெடுத்திருக்கின்றோம். அலோசியசுக்கு சொந்தமான 3 நிறுவனங்களின் அனுமதிப்பத்திரங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.செலுத்தப்படாமலுள்ள வரித்தொகைக்கு பதிலாக அவர்களது சொத்துக்களை அரசுடைமையாக்க முடியும் என்று சட்டத்திலிருந்தால் அதற்குரிய நடவடிக்கையும் முன்னெடுக்கப்படும். ஆனால் துரதிஷ்டவசமாக அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்வதற்கான ஏற்பாடுகள் மாத்திரமே சட்டத்தில் காணப்படுகின்றன. மேலும் நிறுவனங்களின் செயற்பாடுகள் செயலிழந்துள்ளன. தேவையேற்படின் அவற்றுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். என்றார்.