• Dec 12 2024

இலங்கை அரசுக்கு 22 ரயில் எஞ்சின்களை நன்கொடையாக வழங்கும் இந்தியா

Chithra / Dec 11th 2024, 1:23 pm
image


இலங்கை தொடருந்து திணைக்களத்திற்கு 22 அமெரிக்கன் லோகோமோட்டிவ் (Locomotive) கொம்பெனி டீசல் எஞ்சின்களை நன்கொடையாக வழங்குவதற்கு இந்திய புகையிரத சேவை விருப்பம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இலங்கை தொடருந்து திணைக்களத்திற்கு சிறிதளவு பயன்படுத்தப்பட்ட 20 எம் 10 என்ஜின் இயந்திரங்களையும், பராமரிப்புக்கு தேவையான உதிரி பாகங்களுக்கு பயன்படுத்துவதற்காக, மேலதிகமாக இரண்டு இயந்திரங்களையும் இந்தியா வழங்கவுள்ளது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சரின் சமர்ப்பிப்புக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில், இந்த முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், 22 இயந்திரங்களை வழங்குவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதுடன், இலங்கை அரசாங்கம் இந்த மானியத்தை முறைப்படி ஏற்றுக்கொண்டுள்ளது. 

இலங்கை அரசுக்கு 22 ரயில் எஞ்சின்களை நன்கொடையாக வழங்கும் இந்தியா இலங்கை தொடருந்து திணைக்களத்திற்கு 22 அமெரிக்கன் லோகோமோட்டிவ் (Locomotive) கொம்பெனி டீசல் எஞ்சின்களை நன்கொடையாக வழங்குவதற்கு இந்திய புகையிரத சேவை விருப்பம் தெரிவித்துள்ளது.இதன்படி, இலங்கை தொடருந்து திணைக்களத்திற்கு சிறிதளவு பயன்படுத்தப்பட்ட 20 எம் 10 என்ஜின் இயந்திரங்களையும், பராமரிப்புக்கு தேவையான உதிரி பாகங்களுக்கு பயன்படுத்துவதற்காக, மேலதிகமாக இரண்டு இயந்திரங்களையும் இந்தியா வழங்கவுள்ளது.போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சரின் சமர்ப்பிப்புக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில், இந்த முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.இந்நிலையில், 22 இயந்திரங்களை வழங்குவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதுடன், இலங்கை அரசாங்கம் இந்த மானியத்தை முறைப்படி ஏற்றுக்கொண்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement