• Mar 28 2026

பிஸ்கட், ஐஸ்கிரீம் உள்ளிட்ட இனிப்பு வகைகளின் விலைகளில் மாற்றமா? - வெளியான அறிவிப்பு

Chithra / Mar 27th 2026, 12:51 pm
image

பிஸ்கட், ஐஸ்கிரீம் மற்றும் சாக்லேட் உள்ளிட்ட இனிப்பு உற்பத்திப் பொருட்களின் விலைகளை எதிர்வரும் மே மாதம் வரை அதிகரிக்கப் போவதில்லை என இலங்கை இனிப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


நேற்று வியாழக்கிழமை  (26) வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.


மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலால் இந்தத் துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் நுகர்வோர் மீதான தாக்கம் குறித்து ஆராய அமைச்சர் இந்தச் சந்திப்பை அழைத்திருந்தார்.


பொருட்களின் விலை அதிகரிப்பை நுகர்வோரால் தற்போது தாங்கிக்கொள்ள முடியாது என இதன்போது சுட்டிக்காட்டிய அமைச்சர் வசந்த சமரசிங்க, உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியில் உள்நாட்டு பிஸ்கட் கைத்தொழிலைப் பாதுகாக்கும் அதேவேளை, நுகர்வோர் பாதிக்கப்படுவதை ஆகக்குறைந்த மட்டத்தில் பேணுவதே அரசாங்கத்தின் நோக்கம் எனத் தெரிவித்தார்.


இலங்கை இனிப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் எஸ்.எம்.டி. சூரியப்பெரும இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில்,


கடந்த காலங்களில் மூலப்பொருட்களின் விலைகள் அதிகரித்த போதிலும், கோவிட் காலத்திற்குப் பின்னர் விலைகளை அதிகரிக்காமல் குறைந்த லாபத்துடனேயே இத்துறையை முன்னெடுத்து வருகிறோம். 


மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்கள் விற்பனைக்கு உகந்த காலம் என்பதால், சித்திரைப் புத்தாண்டு முடியும் வரை எவ்வித விலை அதிகரிப்பையும் மேற்கொள்ளப் போவதில்லை எனத் தீர்மானித்துள்ளோம்.


மே மாதத்திற்குப் பின்னர் மின்சாரம், எரிவாயு மற்றும் மூலப்பொருட்களின் விலைகள் மேலும் அதிகரித்தால் மட்டுமே விலை திருத்தம் குறித்து ஆலோசிக்கப்படும் எனவும் மேலும் தெரிவித்தார்.


மூலப்பொருட்களை சுங்கத்திலிருந்து விடுவிப்பதில் பாரிய தாமதம் ஏற்படுவதாகவும், கப்பல் கட்டணங்கள் மேலதிகமாக அறவிடப்படுவதாகவும் உற்பத்தியாளர்கள் அமைச்சரிடம் சுட்டிக்காட்டினர்.


அத்துடன், உற்பத்திப் பொருட்களை விநியோகிப்பதற்குத் தேவையான எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கு முறையான நடைமுறை ஒன்றினை உருவாக்கித் தருமாறும் அவர்கள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிஸ்கட், ஐஸ்கிரீம் உள்ளிட்ட இனிப்பு வகைகளின் விலைகளில் மாற்றமா - வெளியான அறிவிப்பு பிஸ்கட், ஐஸ்கிரீம் மற்றும் சாக்லேட் உள்ளிட்ட இனிப்பு உற்பத்திப் பொருட்களின் விலைகளை எதிர்வரும் மே மாதம் வரை அதிகரிக்கப் போவதில்லை என இலங்கை இனிப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.நேற்று வியாழக்கிழமை  (26) வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலால் இந்தத் துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் நுகர்வோர் மீதான தாக்கம் குறித்து ஆராய அமைச்சர் இந்தச் சந்திப்பை அழைத்திருந்தார்.பொருட்களின் விலை அதிகரிப்பை நுகர்வோரால் தற்போது தாங்கிக்கொள்ள முடியாது என இதன்போது சுட்டிக்காட்டிய அமைச்சர் வசந்த சமரசிங்க, உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியில் உள்நாட்டு பிஸ்கட் கைத்தொழிலைப் பாதுகாக்கும் அதேவேளை, நுகர்வோர் பாதிக்கப்படுவதை ஆகக்குறைந்த மட்டத்தில் பேணுவதே அரசாங்கத்தின் நோக்கம் எனத் தெரிவித்தார்.இலங்கை இனிப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் எஸ்.எம்.டி. சூரியப்பெரும இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில்,கடந்த காலங்களில் மூலப்பொருட்களின் விலைகள் அதிகரித்த போதிலும், கோவிட் காலத்திற்குப் பின்னர் விலைகளை அதிகரிக்காமல் குறைந்த லாபத்துடனேயே இத்துறையை முன்னெடுத்து வருகிறோம். மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்கள் விற்பனைக்கு உகந்த காலம் என்பதால், சித்திரைப் புத்தாண்டு முடியும் வரை எவ்வித விலை அதிகரிப்பையும் மேற்கொள்ளப் போவதில்லை எனத் தீர்மானித்துள்ளோம்.மே மாதத்திற்குப் பின்னர் மின்சாரம், எரிவாயு மற்றும் மூலப்பொருட்களின் விலைகள் மேலும் அதிகரித்தால் மட்டுமே விலை திருத்தம் குறித்து ஆலோசிக்கப்படும் எனவும் மேலும் தெரிவித்தார்.மூலப்பொருட்களை சுங்கத்திலிருந்து விடுவிப்பதில் பாரிய தாமதம் ஏற்படுவதாகவும், கப்பல் கட்டணங்கள் மேலதிகமாக அறவிடப்படுவதாகவும் உற்பத்தியாளர்கள் அமைச்சரிடம் சுட்டிக்காட்டினர்.அத்துடன், உற்பத்திப் பொருட்களை விநியோகிப்பதற்குத் தேவையான எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கு முறையான நடைமுறை ஒன்றினை உருவாக்கித் தருமாறும் அவர்கள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement