• Nov 23 2024

நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு, தொல்லியல் கொடுத்தது பொய்யான அறிக்கை - சட்டத்தரணி சுகாஸ்!

Tharun / Mar 12th 2024, 8:46 pm
image

வெடுக்குநாறி மலையில் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பாக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்யவுள்ளதாக ஆலயம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சுகாஸ் தெரிவித்தார்.

இது தொடர்பாக தொடர்ச்சியாக கருத்து தெரிவித்த அவர்,

வெடுக்குநாறி ஆலயத்தில் கைதுசெய்யப்பட்ட எட்டு  அப்பாவி சந்தேகநபர்கள் தொடர்பான வழக்கு இன்று(12) அழைக்கப்பட்டது. இன்று காலையில் இருந்து பெரும் சட்டப் போராட்டமாகவே அது அமைந்திருந்தது. இருப்பினும் அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 இந்த விடயம் தொடர்பாக நாம் மேன்முறையீடு செய்யவுள்ளோம்.அந்த எட்டுபேர் மீதும் எந்த விதமான தவறும் கிடையாது. அவர்களுக்கு நீதி கிடைக்கின்றவரை நாம் தொடர்ச்சியாக போராடுவோம். இந்த சந்தேக நபர்கள் தொல்லியல் சின்னங்களிற்கு சேதத்தினை ஏற்ப்படுத்தியதாக தொல்லியல் திணைக்களத்தால் உண்மைக்கு புறம்பான ஒரு பொய்யான அறிக்கையினை நீதிமன்றிலே தாக்கல் செய்துள்ளது. உண்மையில் அவ்வாறான எத்தகைய சேதங்களும் ஏற்பட்டிருக்கவில்லை. அதனை நாம் மேன்முறையீட்டில்  விளக்கத்தின் போது நிருபிப்போம். என்றார்.

நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு, தொல்லியல் கொடுத்தது பொய்யான அறிக்கை - சட்டத்தரணி சுகாஸ் வெடுக்குநாறி மலையில் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பாக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்யவுள்ளதாக ஆலயம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சுகாஸ் தெரிவித்தார்.இது தொடர்பாக தொடர்ச்சியாக கருத்து தெரிவித்த அவர்,வெடுக்குநாறி ஆலயத்தில் கைதுசெய்யப்பட்ட எட்டு  அப்பாவி சந்தேகநபர்கள் தொடர்பான வழக்கு இன்று(12) அழைக்கப்பட்டது. இன்று காலையில் இருந்து பெரும் சட்டப் போராட்டமாகவே அது அமைந்திருந்தது. இருப்பினும் அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த விடயம் தொடர்பாக நாம் மேன்முறையீடு செய்யவுள்ளோம்.அந்த எட்டுபேர் மீதும் எந்த விதமான தவறும் கிடையாது. அவர்களுக்கு நீதி கிடைக்கின்றவரை நாம் தொடர்ச்சியாக போராடுவோம். இந்த சந்தேக நபர்கள் தொல்லியல் சின்னங்களிற்கு சேதத்தினை ஏற்ப்படுத்தியதாக தொல்லியல் திணைக்களத்தால் உண்மைக்கு புறம்பான ஒரு பொய்யான அறிக்கையினை நீதிமன்றிலே தாக்கல் செய்துள்ளது. உண்மையில் அவ்வாறான எத்தகைய சேதங்களும் ஏற்பட்டிருக்கவில்லை. அதனை நாம் மேன்முறையீட்டில்  விளக்கத்தின் போது நிருபிப்போம். என்றார்.

Advertisement

Advertisement

Advertisement