• Sep 22 2024

இலங்கையில் 'புதிய தாதியர்களுக்கான நியமனக் கடிதங்கள் நாளை! samugammedia

Tamil nila / Nov 16th 2023, 5:25 pm
image

Advertisement

இலங்கையில் நோயாளர் பராமரிப்பு சேவைகளை வலுப்படுத்தும் வகையில் 2,519 புதிய தாதியர்களுக்கு நாளை (17) நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளன.

பிரதமர் தினேஷ் குணவர்தனவின் தலைமையில் குறித்த நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளன.

2020 ஆம் ஆண்டு பயிற்சியை ஆரம்பித்து பாடநெறியை வெற்றிகரமாக நிறைவுசெய்த 2,519 மாணவர் தாதியர்கள் இங்கு நியமிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், தற்போது நாடளாவிய ரீதியில் 42,000 க்கும் அதிகமான தாதியர்கள் பணிபுரிகின்றனர்.

குறித்த ஆட்சேர்ப்பின் மூலம் நாட்டில் தாதியர்களின் எண்ணிக்கை 45,000 ஆக அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது .


இலங்கையில் 'புதிய தாதியர்களுக்கான நியமனக் கடிதங்கள் நாளை samugammedia இலங்கையில் நோயாளர் பராமரிப்பு சேவைகளை வலுப்படுத்தும் வகையில் 2,519 புதிய தாதியர்களுக்கு நாளை (17) நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளன.பிரதமர் தினேஷ் குணவர்தனவின் தலைமையில் குறித்த நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளன.2020 ஆம் ஆண்டு பயிற்சியை ஆரம்பித்து பாடநெறியை வெற்றிகரமாக நிறைவுசெய்த 2,519 மாணவர் தாதியர்கள் இங்கு நியமிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இந்தநிலையில், தற்போது நாடளாவிய ரீதியில் 42,000 க்கும் அதிகமான தாதியர்கள் பணிபுரிகின்றனர்.குறித்த ஆட்சேர்ப்பின் மூலம் நாட்டில் தாதியர்களின் எண்ணிக்கை 45,000 ஆக அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது .

Advertisement

Advertisement

Advertisement