வன விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதங்களை நிவர்த்தி செய்வதற்கும், விலங்குகளை நிர்வகிப்பதற்கான அத்தியாவசிய பரிந்துரைகளை வழங்குவதற்கும் 15 பேர் கொண்ட ஒரு சிறப்பு குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவை,கமத்தொழில், காணி, கால்நடைகள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சகத்தின் செயலாளர் எம்.பி.என்.எம்.
விக்ரமசிங்க, அமைச்சர் கே.டி. லால்காந்தவின் வழிகாட்டுதலின் கீழ் நியமித்துள்ளார்.
அத்துடன், கமத்தொழில், கால்நடை வளங்கள் , காணி மற்றும் நீர்பாசன அமைச்சின் மேலதிக செயலாளர் டி.எஸ். ரத்னசிங்க இந்தக் குழுவின் தவிசாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பல ஆண்டுகளாக முறையான மேலாண்மை இல்லாமல் உருவாகியுள்ள இந்த நீண்டகால பிரச்சினைக்கு அரசாங்கம் தீர்வு காண எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
இந்தக் குழுவின் பரிந்துரைகளுக்கு ஏற்ப குறுகிய கால மற்றும் நீண்ட கால நடவடிக்கைகளை செயற்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
மேலும், இந்தக் குழுவின் அனைத்து பரிந்துரைகளும் மார்ச் மாத இறுதிக்குள் அமைச்சரிடம் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
வன விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதங்களை நிவர்த்தி செய்ய குழு நியமனம் வன விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதங்களை நிவர்த்தி செய்வதற்கும், விலங்குகளை நிர்வகிப்பதற்கான அத்தியாவசிய பரிந்துரைகளை வழங்குவதற்கும் 15 பேர் கொண்ட ஒரு சிறப்பு குழு நியமிக்கப்பட்டுள்ளது.இந்த குழுவை,கமத்தொழில், காணி, கால்நடைகள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சகத்தின் செயலாளர் எம்.பி.என்.எம்.விக்ரமசிங்க, அமைச்சர் கே.டி. லால்காந்தவின் வழிகாட்டுதலின் கீழ் நியமித்துள்ளார்.அத்துடன், கமத்தொழில், கால்நடை வளங்கள் , காணி மற்றும் நீர்பாசன அமைச்சின் மேலதிக செயலாளர் டி.எஸ். ரத்னசிங்க இந்தக் குழுவின் தவிசாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.பல ஆண்டுகளாக முறையான மேலாண்மை இல்லாமல் உருவாகியுள்ள இந்த நீண்டகால பிரச்சினைக்கு அரசாங்கம் தீர்வு காண எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.இந்தக் குழுவின் பரிந்துரைகளுக்கு ஏற்ப குறுகிய கால மற்றும் நீண்ட கால நடவடிக்கைகளை செயற்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.மேலும், இந்தக் குழுவின் அனைத்து பரிந்துரைகளும் மார்ச் மாத இறுதிக்குள் அமைச்சரிடம் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.