அராலி இந்துக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவானது நேற்று (08) கல்லூரியின் மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
மேற்கத்தேய இசை வாத்தியங்கள் முழங்க விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டு, மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. அதனைத் தொடர்ந்து கலை நிகழ்வுகள் மற்றும் பரிசில்கள் வழங்கும் வைபவம் என்பன இடம்பெற்றன.
கல்லூரியின் முதல்வர் கு.பாலமுருகன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதம அதிதியாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் பா.தனபாலன் அவர்களும், சிறப்பு விருந்தினராக சங்கானை கோட்டக் கல்விப் பணிப்பாளர் சூ.நொபேட் உதயகுமார் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக வேல்ட் விஷன் நிறுவனத்தின் நிகழ்ச்சித் திட்டப் பணிப்பாளர் எக்ஸ்.அஞ்சலிற்ரோ மற்றும் பாரி அறக்கட்டளையின் தலைவர் ச.நிகேஷ் அவர்களும் கலந்து சிறப்பித்ததுடன், ஆசிரியர்கள், மாணவர்கள், அயற்பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்கள், பழைய மாணவர்கள் மற்று பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
அராலி சரஸ்வதி இந்துக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா அராலி இந்துக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவானது நேற்று (08) கல்லூரியின் மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.மேற்கத்தேய இசை வாத்தியங்கள் முழங்க விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டு, மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. அதனைத் தொடர்ந்து கலை நிகழ்வுகள் மற்றும் பரிசில்கள் வழங்கும் வைபவம் என்பன இடம்பெற்றன.கல்லூரியின் முதல்வர் கு.பாலமுருகன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதம அதிதியாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் பா.தனபாலன் அவர்களும், சிறப்பு விருந்தினராக சங்கானை கோட்டக் கல்விப் பணிப்பாளர் சூ.நொபேட் உதயகுமார் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக வேல்ட் விஷன் நிறுவனத்தின் நிகழ்ச்சித் திட்டப் பணிப்பாளர் எக்ஸ்.அஞ்சலிற்ரோ மற்றும் பாரி அறக்கட்டளையின் தலைவர் ச.நிகேஷ் அவர்களும் கலந்து சிறப்பித்ததுடன், ஆசிரியர்கள், மாணவர்கள், அயற்பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்கள், பழைய மாணவர்கள் மற்று பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.