குற்றப் புலனாய்வுப் பகுதியினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலைத் தொடர்ந்து மன்னார் நகரில் சுமார் எட்டு இலட்சம் ரூபா பெறுமதியான கேரளக் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று (08) இரவு மன்னார் நகரில் இடம் பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மன்னார் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் திருகோணமலைப் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் இணைந்து மன்னார் நகரில் மேற்கொண்ட சோதனையில் கற்பிட்டி பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் சுமார் எட்டு இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவை மன்னார் நகர் பகுதியில் தன்வசம் வைத்துக்கொண்டு விற்பனை செய்வதற்காக வைத்திருந்தபோதே கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்படி சந்தேகநபர், அவரிடமிருந்த கேரள கஞ்சாவுடன் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளார்.
மன்னாரில் எட்டு இலட்சம் பெறுமதியான கேரளக் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது குற்றப் புலனாய்வுப் பகுதியினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலைத் தொடர்ந்து மன்னார் நகரில் சுமார் எட்டு இலட்சம் ரூபா பெறுமதியான கேரளக் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்தச் சம்பவம் நேற்று (08) இரவு மன்னார் நகரில் இடம் பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மன்னார் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் திருகோணமலைப் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் இணைந்து மன்னார் நகரில் மேற்கொண்ட சோதனையில் கற்பிட்டி பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேகநபர் சுமார் எட்டு இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவை மன்னார் நகர் பகுதியில் தன்வசம் வைத்துக்கொண்டு விற்பனை செய்வதற்காக வைத்திருந்தபோதே கைது செய்யப்பட்டுள்ளார்.மேற்படி சந்தேகநபர், அவரிடமிருந்த கேரள கஞ்சாவுடன் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளார்.