• Nov 13 2024

யாழில் தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் - மக்கள் மன்றக் கூட்டம்!

Tharmini / Nov 9th 2024, 3:31 pm
image

தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் மக்கள் மன்றக் கூட்டம் அதன் தலைவர் வி.எஸ். சிவகரன் தலைமையில் யாழ்ப்பாணம் கலைத்தூது மண்டபத்தில் இன்று (09) சனிக்கிழமை நடைபெற்றது.

'நாடாளுமன்றத் தேர்தலில் உங்கள் கட்சிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்? தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு என்ன?' எனும் தொனிப் பொருளில் இந்த மக்கள் மன்றம் இடம்பெற்றது.

இதன்போது தமிழ்த் தேசியப் பரப்பிலுள்ள அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர்கள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டனர்.

இந்தக் கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் சார்பில் வேட்பாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சுயேச்சைக் குழுவின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா, தமிழ் மக்கள் கூட்டணியின் சார்பில் சட்டத்தரணி வி.மணிவண்ணண், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் சார்பில் என்.சிறிகாந்தா ஆகியோர் அரசியல் பிரதிநிதிகளாகக் கலத்துகொண்டிருந்தனர்.

இதேபோன்று சிவில் சமூகத்தின் சார்பில் அருட்தந்தை ஜெயக்குமார் அடிகளார், யாழ். பல்கலைக்கழக அரசறிவியல்துறை விரிவுரையாளர் கலாநிதி விக்னேஸ்வரன், சட்டத்துறை விரிவுரையாளர் கோசலை மதன் ஆகியோரும் கலந்துகொண்டு உரையாற்றியிருந்தனர்.

மேற்படி கூட்டத்தில் பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள், வேட்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





யாழில் தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் - மக்கள் மன்றக் கூட்டம் தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் மக்கள் மன்றக் கூட்டம் அதன் தலைவர் வி.எஸ். சிவகரன் தலைமையில் யாழ்ப்பாணம் கலைத்தூது மண்டபத்தில் இன்று (09) சனிக்கிழமை நடைபெற்றது.'நாடாளுமன்றத் தேர்தலில் உங்கள் கட்சிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு என்ன' எனும் தொனிப் பொருளில் இந்த மக்கள் மன்றம் இடம்பெற்றது.இதன்போது தமிழ்த் தேசியப் பரப்பிலுள்ள அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர்கள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டனர்.இந்தக் கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் சார்பில் வேட்பாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சுயேச்சைக் குழுவின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா, தமிழ் மக்கள் கூட்டணியின் சார்பில் சட்டத்தரணி வி.மணிவண்ணண், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் சார்பில் என்.சிறிகாந்தா ஆகியோர் அரசியல் பிரதிநிதிகளாகக் கலத்துகொண்டிருந்தனர்.இதேபோன்று சிவில் சமூகத்தின் சார்பில் அருட்தந்தை ஜெயக்குமார் அடிகளார், யாழ். பல்கலைக்கழக அரசறிவியல்துறை விரிவுரையாளர் கலாநிதி விக்னேஸ்வரன், சட்டத்துறை விரிவுரையாளர் கோசலை மதன் ஆகியோரும் கலந்துகொண்டு உரையாற்றியிருந்தனர்.மேற்படி கூட்டத்தில் பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள், வேட்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement