• Dec 06 2024

அனைத்து இன மக்களுக்கும் சம உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் புதிய அரசமைப்பு - ஜனாதிபதி அறிவிப்பு

Tharmini / Nov 9th 2024, 3:42 pm
image

"புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பமாகி சுமார் மூன்று மாதங்களுக்குப் பிறகே புதிய அரசமைப்பை இயற்றுவதற்குரிய பணி குறித்து கவனம் செலுத்தப்படும். 

அனைத்து இன மக்களுக்கும் சம உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் புதிய அரசமைப்பு அமையும்.

"இவ்வாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,"எமது நாட்டில் இதுவரை இயற்றப்பட்டுள்ள அரசமைப்பு தொடர்பில் மக்களின் அனுமதி பெறப்படவில்லை. சோல்பறி அரசமைப்பு, 1972 அரசமைப்பு மற்றும் 1978 அரசமைப்பு என்பன மக்கள் மத்தியில் வாக்கெடுப்புக்கு விடப்படவில்லை. 

மக்களுக்குரிய அடிப்படை சட்டங்களே அரசமைப்பாகும். எனவே, நாம் நிச்சயம் மக்களிடம் அனுமதி கோருவோம். இது மக்களுக்குரிய ஜனநாயக உரிமையாகும்.

புதிய அரசமைப்பை இயற்றும்போது 2015 இல் முன்னெடுக்கப்பட்ட அரசமைப்பு பணியில் உள்ள யோசனைகள் கருத்திற்கொள்ளப்படும், புதிதாக யோசனைகள் உள்வாங்கப்படும், கோட்டாபய ஆட்சிகாலத்திலும் குழுவொன்று அமைக்கப்பட்டது, அது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படும்.

இவை எல்லாவற்றையும் ஆராய்ந்து, சாதகமான, மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தக்கூடிய, தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுக்குரிய சம உரிமையை உறுதிப்படுத்தல் உள்ளிட்ட விடயங்களை மையப்படுத்திய வகையில் புதிய அரசமைப்பு முன்வைக்கப்படும்.

புதிய நாடாளுமன்றத்தில் முதல் மூன்று, நான்கு மாதங்களில் அரசமைப்பு தொடர்பில் குறைந்தளவிலேயே அவதானம் செலுத்தப்படும். பொருளாதாரம் பற்றியே கூடுதல் கவனம் செலுத்தப்படும். அதன்பிறகு அரசமைப்பு பற்றி அவதானம் செலுத்தப்படும்.” – என்றார்.

அனைத்து இன மக்களுக்கும் சம உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் புதிய அரசமைப்பு - ஜனாதிபதி அறிவிப்பு "புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பமாகி சுமார் மூன்று மாதங்களுக்குப் பிறகே புதிய அரசமைப்பை இயற்றுவதற்குரிய பணி குறித்து கவனம் செலுத்தப்படும். அனைத்து இன மக்களுக்கும் சம உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் புதிய அரசமைப்பு அமையும்."இவ்வாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,"எமது நாட்டில் இதுவரை இயற்றப்பட்டுள்ள அரசமைப்பு தொடர்பில் மக்களின் அனுமதி பெறப்படவில்லை. சோல்பறி அரசமைப்பு, 1972 அரசமைப்பு மற்றும் 1978 அரசமைப்பு என்பன மக்கள் மத்தியில் வாக்கெடுப்புக்கு விடப்படவில்லை. மக்களுக்குரிய அடிப்படை சட்டங்களே அரசமைப்பாகும். எனவே, நாம் நிச்சயம் மக்களிடம் அனுமதி கோருவோம். இது மக்களுக்குரிய ஜனநாயக உரிமையாகும்.புதிய அரசமைப்பை இயற்றும்போது 2015 இல் முன்னெடுக்கப்பட்ட அரசமைப்பு பணியில் உள்ள யோசனைகள் கருத்திற்கொள்ளப்படும், புதிதாக யோசனைகள் உள்வாங்கப்படும், கோட்டாபய ஆட்சிகாலத்திலும் குழுவொன்று அமைக்கப்பட்டது, அது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படும்.இவை எல்லாவற்றையும் ஆராய்ந்து, சாதகமான, மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தக்கூடிய, தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுக்குரிய சம உரிமையை உறுதிப்படுத்தல் உள்ளிட்ட விடயங்களை மையப்படுத்திய வகையில் புதிய அரசமைப்பு முன்வைக்கப்படும்.புதிய நாடாளுமன்றத்தில் முதல் மூன்று, நான்கு மாதங்களில் அரசமைப்பு தொடர்பில் குறைந்தளவிலேயே அவதானம் செலுத்தப்படும். பொருளாதாரம் பற்றியே கூடுதல் கவனம் செலுத்தப்படும். அதன்பிறகு அரசமைப்பு பற்றி அவதானம் செலுத்தப்படும்.” – என்றார்.

Advertisement

Advertisement

Advertisement