• May 20 2024

சிறுவர் தொழிலாளர்களை ஒட்டுசுட்டான், பூநகரி பிரதேச அரச அதிகாரிகள் ஊக்குவிக்கின்றனரா? - கிராம மட்ட செயற்பாட்டாளர்கள் கேள்வி! samugammedia

Tamil nila / Oct 22nd 2023, 8:15 am
image

Advertisement

சிறுவர் தொழிலாளர்களை அரச அதிகாரிகள் ஊக்குவிக்கின்றனரா? என கிராம மட்ட செயற்பாட்டாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் அதிகளவான சிறுவர்கள் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதும், வேலைக்காக அமைர்த்தப்படுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

இவ்விடயம் தொடர்பில் கிராம மட்டத்தில் அரச அரச சார்பற்ற நிறுவனங்களினால் விழிப்புணர்வு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றபோதிலும், அதன் அதிகரிப்பில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் கிழவன்குழம், பனிக்கன்குளம் போன்ற இடங்களில் ஏ9 வீதியில் சிறுவர்கள் பாலைப்பழம், நாவற்பழம் விற்று  பணம் சேகரித்த வருகின்றமையை அவதானிக்க முடிகின்றது.

அதேபோன், கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில், நல்லூர், கௌதாரி முனை சந்தி போன்ற பகுதியில் இவ்வாறு சிறுவர்கள் வியாபாரத்தில் ஈடுபடுகின்றனர்.

இதில் மிக கவலையான விடயம் என்னவெனில், குறித்த வீதியால் பயணித்தே அவ்விரு பிரதேச செயலாளர்கள், பதவி நிலை உத்தியோகத்தர்கள், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் என முக்கிய பொறுப்புவாய்ந்த தலைவர்கள் நாளாந்தம் அலுவலகத்திற்கு சென்று வீடு திரும்புகின்றனர்.

ஆனாலும், குறித்த செயற்பாட்டில் எவ்வித மாற்றங்களையும் இதுவரை அவதானிக்கவில்லை. அண்மையில் ஒரு சிறுவன் தனது பாடசாலைக் கல்விலை இடைவிட்டு குறித்த வர்த்தக செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தமை ஊடகங்களில் வெளியாகியிருந்தது.

கடந்த வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணியளவில் ஒளிப்பதிவு செய்யப்பட்ட காட்சிகளில், ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் கிழவன்குளம் என்ற பிரதேசத்தில் இரண்டு சிறுவர்கள் ஏ9 வீதியிலிருந்து நாவல் பழம் வியாபாரம் செய்து வருகின்றனர்.

பெற்றோரும் இதற்கு அனுமதித்துள்ளனர். காரணம், சிறுவர்களைக் கண்டு வாகனங்களில் பயணிக்கும் பிரயாணிகள் வாகனத்தை நிறுத்தி அவற்றை பெற்று செல்வதால் அதிக வருமானத்தை ஈடு்ட முடிகின்றது. இந்த வியாபார நுட்பத்தை பயன்படுத்தி பெற்றோரும் அதற்கு ஒத்துழைக்கின்றனர். 

ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவுகளிலும் கிராம சேவையாளர், சமுர்த்தி அலுவரல், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளமைக்கு மேலதிகமாக, விவசாயம், கலாச்சாரம், சிறுவர் பெண்கள் தொடர்பான பிரச்சினைகளை கையாளுதல் உள்ளிட்ட விடயங்களிற்காக அவ்வந்த திணைக்களங்கள், அதிகார சபைகள் மூலம் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆனாலும், அவர்களின் செயற்பாடு போதுமானதாக தெரியவில்லை. இவிவியடம் தொடர்பில் கிராம மட்ட்களில் சிறுவர்கள் பெண்கள் தொடர்பில் சேவையாற்றி வரும் விஜயகுமார் சரஸ்வதி குறிப்பிடுகையில்,

சிறுவர்கள் வேலைகளிற்கு அமர்த்தப்படுவது தொடர்பில் பல்வேறு சந்தர்ப்பங்களில் பிரதேச செயலகம், பொலிஸ் நிலையம் என பல்வேறு தரப்பினரிடம் முறைப்பாடு செய்துள்ளோம். ஆனால் அவர்கள் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

அண்மை வரை, சிறுவர் தொழிலாளர்களை பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் அடையாளம் கண்டு உரிய தரப்புக்கு தெரியப்படுத்தியிருந்தோம். 2 பேரை பாடசாரை அதிபருடன் பேசி மீண்டும் கல்விக்காக அனுமதி கோரி மீள இணைத்துள்ளோம்.

பிரதேச செயலகம், பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் அக்கறை செலுத்தப்படவில்லை. 15 வயது சிறுமியை 27 வயதுடைய இளைஞன் திருமணம் செய்துகொள்ள அழைத்து சென்றுள்ளார். அது சிறுவர் பாதுகாப்பு சட்டத்தில் பாரிய குற்றமாகும்.

ஆனால், குறித்த சிறுமியை கண்டுபிடிக்க எவரும் முன்வரவில்லை. இது காலப்போக்கில், சிறுவயது திருமணத்திற்கு வழிவகுக்கும். ஆமலும், சிறுவர்கள் பாதிப்புக்குள்ளாகும் அபாயமும் உள்ளது. சிறுவர்களை பாலைப்பழம், நாவற்பழம் விற்பதற்காக பெற்றோர் அனுமதிக்கின்றனர்.

அண்மையில், பூநகரியிலிருந்து ஒரு சிறுவனை அவரது தாயார் புத்தளம் பிரதேசத்திற்கு வேலைக்காக அழைத்து சென்றுள்ளார். இவ்வாறு சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதில் பெற்றோர் ஈடுபடுகின்றனர். அவ்வாறானவர்களிற்கு சமுர்த்தி உள்ளிட்ட அரச உதவிகளும் வழங்கப்படுகின்றது.

சிறுவர்கள் தொடர்பில் நியமிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் தமது கடமையை முறையாக செய்வதில்லை. விழிப்புணர்வு செயற்திட்டங்களை மாத்திரம் முன்னெடுப்பது போதாது. சிறுவர்கள் தொழிலுக்கு அமர்த்துவது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்தால் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

அரசாங்கம், அவ்வாறானவர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறானவர்களிற்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் எந்தவொரு உதவியையும் வழங்காது தடுக்க வேண்டும். அதன் மூலமே ஏனைய சிறுவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய முடியும் என தெரிவிக்கின்றார்.

இதேவேளை, கிராம மட்ட சமூக சேவையாளரான நவரத்தினம் கமலாதேவி குறிப்பிடுகையில், சிறுவர் பெண்கள் தொடர்பில் பல உத்தியோகத்தர்கள் செயற்படுகின்றார்கள். ஆனால் அவர்கள் அர்ப்பணிப்புடன் செயற்படவில்லை. 2000 ருபா சம்பளத்திற்கு மண் ஏற்றுவதற்கு சிறுவர்களை அழைத்து செல்கின்றனர். கடைகளில் வேலைக்கு அமர்த்துகின்றனர்.

சிறுவர்களை வேலை்கு அமர்த்துபவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிடின் எமது சமூகத்தை பாதிகாக்க முடியாது. சிறுவர்களிடம் மதுபாணங்களை வேண்டி வருமாறு பெற்றோர் பணிக்கின்றனர். நாளடைவில் சிறுவர்களும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமைாயாகின்றனர் என அவர் தெரிவித்தார்.

குறித்த விடயம் தொடர்பில் ஆராய்ந்த எமது செய்திப் பிரிவு, சிறுவர் தொழிலாளர்கள் தொடர்பில் காட்சிகளையும் பதிவு செய்ய தவறவில்லை. ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் நாவற்பபழ வியாபாரத்தில் சிறுவர்கள் ஈடுபடுவதை அவதானிக்க முடிந்தது.

மேலும், வாகன சுத்திகரிப்பு நிலையமொன்றில் சிறுவன் ஒருவர் தொழிலாளராக பணிக்கமர்த்தப்பட்டுள்ளமையையும் எம்மால் அவதானிக்க முடிந்தது.

சிறுவர் நாட்டின் கண்கள், சிறுவர்கள் எதிர்கால தலைவர்கள் என வெறுமனே சிறுவர் தினங்களில் மாத்திரம் மார்தட்டிக்கொள்ளும் எம் மத்தியிலிருந்து சிறுவர்களை பாதுகாப்பதற்கான மன பக்குவம் எழ வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாகும்.

சிறுவர் தொழிலாளர்களை ஒட்டுசுட்டான், பூநகரி பிரதேச அரச அதிகாரிகள் ஊக்குவிக்கின்றனரா - கிராம மட்ட செயற்பாட்டாளர்கள் கேள்வி samugammedia சிறுவர் தொழிலாளர்களை அரச அதிகாரிகள் ஊக்குவிக்கின்றனரா என கிராம மட்ட செயற்பாட்டாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் அதிகளவான சிறுவர்கள் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதும், வேலைக்காக அமைர்த்தப்படுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.இவ்விடயம் தொடர்பில் கிராம மட்டத்தில் அரச அரச சார்பற்ற நிறுவனங்களினால் விழிப்புணர்வு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றபோதிலும், அதன் அதிகரிப்பில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் கிழவன்குழம், பனிக்கன்குளம் போன்ற இடங்களில் ஏ9 வீதியில் சிறுவர்கள் பாலைப்பழம், நாவற்பழம் விற்று  பணம் சேகரித்த வருகின்றமையை அவதானிக்க முடிகின்றது.அதேபோன், கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில், நல்லூர், கௌதாரி முனை சந்தி போன்ற பகுதியில் இவ்வாறு சிறுவர்கள் வியாபாரத்தில் ஈடுபடுகின்றனர்.இதில் மிக கவலையான விடயம் என்னவெனில், குறித்த வீதியால் பயணித்தே அவ்விரு பிரதேச செயலாளர்கள், பதவி நிலை உத்தியோகத்தர்கள், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் என முக்கிய பொறுப்புவாய்ந்த தலைவர்கள் நாளாந்தம் அலுவலகத்திற்கு சென்று வீடு திரும்புகின்றனர்.ஆனாலும், குறித்த செயற்பாட்டில் எவ்வித மாற்றங்களையும் இதுவரை அவதானிக்கவில்லை. அண்மையில் ஒரு சிறுவன் தனது பாடசாலைக் கல்விலை இடைவிட்டு குறித்த வர்த்தக செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தமை ஊடகங்களில் வெளியாகியிருந்தது.கடந்த வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணியளவில் ஒளிப்பதிவு செய்யப்பட்ட காட்சிகளில், ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் கிழவன்குளம் என்ற பிரதேசத்தில் இரண்டு சிறுவர்கள் ஏ9 வீதியிலிருந்து நாவல் பழம் வியாபாரம் செய்து வருகின்றனர்.பெற்றோரும் இதற்கு அனுமதித்துள்ளனர். காரணம், சிறுவர்களைக் கண்டு வாகனங்களில் பயணிக்கும் பிரயாணிகள் வாகனத்தை நிறுத்தி அவற்றை பெற்று செல்வதால் அதிக வருமானத்தை ஈடு்ட முடிகின்றது. இந்த வியாபார நுட்பத்தை பயன்படுத்தி பெற்றோரும் அதற்கு ஒத்துழைக்கின்றனர். ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவுகளிலும் கிராம சேவையாளர், சமுர்த்தி அலுவரல், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளமைக்கு மேலதிகமாக, விவசாயம், கலாச்சாரம், சிறுவர் பெண்கள் தொடர்பான பிரச்சினைகளை கையாளுதல் உள்ளிட்ட விடயங்களிற்காக அவ்வந்த திணைக்களங்கள், அதிகார சபைகள் மூலம் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.ஆனாலும், அவர்களின் செயற்பாடு போதுமானதாக தெரியவில்லை. இவிவியடம் தொடர்பில் கிராம மட்ட்களில் சிறுவர்கள் பெண்கள் தொடர்பில் சேவையாற்றி வரும் விஜயகுமார் சரஸ்வதி குறிப்பிடுகையில்,சிறுவர்கள் வேலைகளிற்கு அமர்த்தப்படுவது தொடர்பில் பல்வேறு சந்தர்ப்பங்களில் பிரதேச செயலகம், பொலிஸ் நிலையம் என பல்வேறு தரப்பினரிடம் முறைப்பாடு செய்துள்ளோம். ஆனால் அவர்கள் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.அண்மை வரை, சிறுவர் தொழிலாளர்களை பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் அடையாளம் கண்டு உரிய தரப்புக்கு தெரியப்படுத்தியிருந்தோம். 2 பேரை பாடசாரை அதிபருடன் பேசி மீண்டும் கல்விக்காக அனுமதி கோரி மீள இணைத்துள்ளோம்.பிரதேச செயலகம், பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் அக்கறை செலுத்தப்படவில்லை. 15 வயது சிறுமியை 27 வயதுடைய இளைஞன் திருமணம் செய்துகொள்ள அழைத்து சென்றுள்ளார். அது சிறுவர் பாதுகாப்பு சட்டத்தில் பாரிய குற்றமாகும்.ஆனால், குறித்த சிறுமியை கண்டுபிடிக்க எவரும் முன்வரவில்லை. இது காலப்போக்கில், சிறுவயது திருமணத்திற்கு வழிவகுக்கும். ஆமலும், சிறுவர்கள் பாதிப்புக்குள்ளாகும் அபாயமும் உள்ளது. சிறுவர்களை பாலைப்பழம், நாவற்பழம் விற்பதற்காக பெற்றோர் அனுமதிக்கின்றனர்.அண்மையில், பூநகரியிலிருந்து ஒரு சிறுவனை அவரது தாயார் புத்தளம் பிரதேசத்திற்கு வேலைக்காக அழைத்து சென்றுள்ளார். இவ்வாறு சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதில் பெற்றோர் ஈடுபடுகின்றனர். அவ்வாறானவர்களிற்கு சமுர்த்தி உள்ளிட்ட அரச உதவிகளும் வழங்கப்படுகின்றது.சிறுவர்கள் தொடர்பில் நியமிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் தமது கடமையை முறையாக செய்வதில்லை. விழிப்புணர்வு செயற்திட்டங்களை மாத்திரம் முன்னெடுப்பது போதாது. சிறுவர்கள் தொழிலுக்கு அமர்த்துவது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்தால் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.அரசாங்கம், அவ்வாறானவர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறானவர்களிற்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் எந்தவொரு உதவியையும் வழங்காது தடுக்க வேண்டும். அதன் மூலமே ஏனைய சிறுவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய முடியும் என தெரிவிக்கின்றார்.இதேவேளை, கிராம மட்ட சமூக சேவையாளரான நவரத்தினம் கமலாதேவி குறிப்பிடுகையில், சிறுவர் பெண்கள் தொடர்பில் பல உத்தியோகத்தர்கள் செயற்படுகின்றார்கள். ஆனால் அவர்கள் அர்ப்பணிப்புடன் செயற்படவில்லை. 2000 ருபா சம்பளத்திற்கு மண் ஏற்றுவதற்கு சிறுவர்களை அழைத்து செல்கின்றனர். கடைகளில் வேலைக்கு அமர்த்துகின்றனர்.சிறுவர்களை வேலை்கு அமர்த்துபவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிடின் எமது சமூகத்தை பாதிகாக்க முடியாது. சிறுவர்களிடம் மதுபாணங்களை வேண்டி வருமாறு பெற்றோர் பணிக்கின்றனர். நாளடைவில் சிறுவர்களும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமைாயாகின்றனர் என அவர் தெரிவித்தார்.குறித்த விடயம் தொடர்பில் ஆராய்ந்த எமது செய்திப் பிரிவு, சிறுவர் தொழிலாளர்கள் தொடர்பில் காட்சிகளையும் பதிவு செய்ய தவறவில்லை. ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் நாவற்பபழ வியாபாரத்தில் சிறுவர்கள் ஈடுபடுவதை அவதானிக்க முடிந்தது.மேலும், வாகன சுத்திகரிப்பு நிலையமொன்றில் சிறுவன் ஒருவர் தொழிலாளராக பணிக்கமர்த்தப்பட்டுள்ளமையையும் எம்மால் அவதானிக்க முடிந்தது.சிறுவர் நாட்டின் கண்கள், சிறுவர்கள் எதிர்கால தலைவர்கள் என வெறுமனே சிறுவர் தினங்களில் மாத்திரம் மார்தட்டிக்கொள்ளும் எம் மத்தியிலிருந்து சிறுவர்களை பாதுகாப்பதற்கான மன பக்குவம் எழ வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாகும்.

Advertisement

Advertisement

Advertisement