உள்ளுராட்சிமன்றங்களில் பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தினை உறுதிப்படுத்தும் வகையில் பெண்களுக்கான வட்டாரங்கள் குறித்தொதுக்கப்படவேண்டும் என தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் மகளிர் அணி கோரிக்கை விடுத்துள்ளது.
இன்று (10) திகதியன்று கட்சியின் தலைமைக்காரியாலயத்தில் கட்சியின் மகளிர் அணிச் செயலாளர் சுசிகலா அருள்தாஸ் தலைமையில் இடம்பெற்ற கட்சியின் மகளிர் அணிக் கூட்டத்திலேயே மேற்படி கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும் அக் கோரிக்கையில் பெண்களுக்கு அரசியல் சம அந்தஸ்து வழங்கப்பட வேண்டும். பெண்களின் பிரதிநிதித்துவம் அரசியல் துறையில் இன்றியமையாததாக அமையவேண்டும். என பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்ததன் விளைவாக உள்;ராட்சிமன்றத் தேர்தல்களில் 25மூ பெண்களுக்கான இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட நிலையிலும், பெண் பிரதிநிதித்துவங்கள் பல வட்டாரங்களில் வெற்றிபெற முடியாமல் உள்ள சூழலே காணப்படுகின்றது
இந் நிலையினை மாற்றி பெண்களுக்கான வட்டாரங்கள் குறித்தொதுக்கப்பட வேண்டும் அவ்வாறு குறித்தொதுக்கப்படும் போது பெண்களின் அரசியல் பிரவேசம் உறுதிப்படுத்தப்படும்.
ஒவ்வொரு உள்ளுராட்சி மன்ற தேர்தல்களின் போதும் பெண்களுக்கான வட்டார ஒதுக்கீடு சுழர்ச்சி முறையில் இடம்பெறலாம் எனவும் மாறாக 25 வீத இடஒதுக்கீடு என்ற வகையில் மேலதிக பட்டியலில் நியமிப்பது பெண்களின் எண்ணிக்கையை காட்டுமே தவிர அரசியல் பிரதிநிதித்துவத்தினை வலுவடையச்செய்யாது.
கடந்த உள்ளுராட்சி மண்றத்தேர்தலிலும் கிழக்கு எமது கட்சி மாத்திரமே பெண்களுக்கு தவிசாளர் மாநகர முதல்வர் பதவிகளை வழங்கி பெண்களை கௌரவப்படுத்தியிருந்தது எனவும் குறிப்பிடப்பட்டதுடன், இங்கு கருத்து தெருவித்த தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் மகளிர் அணிச் செயலாளர் சுசிகலா அருள்தாஸ் எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் மகளிர் அணி திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு உள்ளிட்ட கிழக்கு மாகாணங்களில் மகளிரை ஒன்றிணைத்து பலமான சக்தியாக பெண்களின் பிரதிநிதித்துவத்தினை பாதுக்காப்பதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துவருதாகவும் பெண் வேட்பாளர்கள் பலர் தாங்களாகவே முன்வந்து தங்களது பெயர்களை முன்மொழிந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
குறித்த இக் கலந்துரையாடலில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் மற்றும் மாவட்ட ரீதியான பெண் பிரதிநிதிகள் பிரதேச ரீதியான பெண் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
பெண்களுக்கான வட்டாரங்கள் குறித்தொகுக்கப்படவேண்டும் - மகளிர் அணி கோரிக்கை உள்ளுராட்சிமன்றங்களில் பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தினை உறுதிப்படுத்தும் வகையில் பெண்களுக்கான வட்டாரங்கள் குறித்தொதுக்கப்படவேண்டும் என தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் மகளிர் அணி கோரிக்கை விடுத்துள்ளது. இன்று (10) திகதியன்று கட்சியின் தலைமைக்காரியாலயத்தில் கட்சியின் மகளிர் அணிச் செயலாளர் சுசிகலா அருள்தாஸ் தலைமையில் இடம்பெற்ற கட்சியின் மகளிர் அணிக் கூட்டத்திலேயே மேற்படி கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும் அக் கோரிக்கையில் பெண்களுக்கு அரசியல் சம அந்தஸ்து வழங்கப்பட வேண்டும். பெண்களின் பிரதிநிதித்துவம் அரசியல் துறையில் இன்றியமையாததாக அமையவேண்டும். என பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்ததன் விளைவாக உள்;ராட்சிமன்றத் தேர்தல்களில் 25மூ பெண்களுக்கான இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட நிலையிலும், பெண் பிரதிநிதித்துவங்கள் பல வட்டாரங்களில் வெற்றிபெற முடியாமல் உள்ள சூழலே காணப்படுகின்றது இந் நிலையினை மாற்றி பெண்களுக்கான வட்டாரங்கள் குறித்தொதுக்கப்பட வேண்டும் அவ்வாறு குறித்தொதுக்கப்படும் போது பெண்களின் அரசியல் பிரவேசம் உறுதிப்படுத்தப்படும்.ஒவ்வொரு உள்ளுராட்சி மன்ற தேர்தல்களின் போதும் பெண்களுக்கான வட்டார ஒதுக்கீடு சுழர்ச்சி முறையில் இடம்பெறலாம் எனவும் மாறாக 25 வீத இடஒதுக்கீடு என்ற வகையில் மேலதிக பட்டியலில் நியமிப்பது பெண்களின் எண்ணிக்கையை காட்டுமே தவிர அரசியல் பிரதிநிதித்துவத்தினை வலுவடையச்செய்யாது. கடந்த உள்ளுராட்சி மண்றத்தேர்தலிலும் கிழக்கு எமது கட்சி மாத்திரமே பெண்களுக்கு தவிசாளர் மாநகர முதல்வர் பதவிகளை வழங்கி பெண்களை கௌரவப்படுத்தியிருந்தது எனவும் குறிப்பிடப்பட்டதுடன், இங்கு கருத்து தெருவித்த தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் மகளிர் அணிச் செயலாளர் சுசிகலா அருள்தாஸ் எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் மகளிர் அணி திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு உள்ளிட்ட கிழக்கு மாகாணங்களில் மகளிரை ஒன்றிணைத்து பலமான சக்தியாக பெண்களின் பிரதிநிதித்துவத்தினை பாதுக்காப்பதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துவருதாகவும் பெண் வேட்பாளர்கள் பலர் தாங்களாகவே முன்வந்து தங்களது பெயர்களை முன்மொழிந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.குறித்த இக் கலந்துரையாடலில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் மற்றும் மாவட்ட ரீதியான பெண் பிரதிநிதிகள் பிரதேச ரீதியான பெண் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.