• May 17 2024

ஆரியகுளம் புத்தருக்கு வந்த ஆசை...! பௌத்த கீதங்களாக மாற்றப்பட்ட சைவப் பாடல்கள்..!samugammedia

Sharmi / May 6th 2023, 10:51 pm
image

Advertisement

ஆரியகுளம் நாகவிகாரையில் சைவ பக்தி பாடல்களின் பின்னணி இசையுடன் அமைந்த தமிழ் மொழி மூல பெளத்த மத பாடல்கள் ஒலிபரப்பப்பட்டு வருகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ் பருத்தித்துறை வீதியில் அமைந்துள்ள ஆரியகுளம் நாகவிகாரையில் இடம்பெறும் வெசாக் நிகழ்வுகளில் ஒலிபெருக்கியில் சைவ பக்தி பாடல்களின் பின்னணி இசையுடன் அமைந்த தமிழ் மொழி மூல பெளத்த மத பாடல்கள் ஒலிபரப்பப்பட்டு வருகின்றது.

இது தொடர்பில் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கையில்,

ஆரியகுளம் நாகவிகாரையில் ஒலிபெருக்கிகள் ஊடாக சைவ பக்தி பாடல்கள் போடப்பட்டு இருந்ததாகவும்  விகாரையில் சைவப் பாடல்கள் போட்டு இருக்குறாங்களே யாழ்ப்பாணத்தில சைவ மக்கள் அதிகம் என்பதால் அவர்களை ஈர்ப்பதற்காக போட்டு இருக்கின்றனர் என நினைத்ததுடன் சற்று நேரம் நின்று அந்த பாடல்களை உண்ணிப்பாக செவிமடுத்தவேளைதான்  அங்கு ஒலிபரப்பப்பட்ட பாடல்கள் சைவ பக்தி பாடல்களின் பின்னணி இசையினை வைத்து தமிழ் மொழி மூலம் மாற்றியமைக்கப்பட்ட பெளத்த மத பாடல்கள் எனவும் தெரியவந்ததாக கூறினர்.

இந்நிலையில் வட மாகாணத்தில் அண்மைக்காலங்களாக இந்து சமய வழிபாட்டு தலங்கள் அழிக்கப்பட்டும் தொல்லியல் இடங்கள் எனும் பெயரில் வழிபாடுகளுக்கு தடைகள் ஏற்படுத்தப்பட்டும் பல்வேறு அடக்குமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் சைவ பக்திப்பாடல்களை பௌத்த கீதங்களாக மாற்றியமைத்து ஒலிபரப்பு செய்யப்படுகின்றமையும் ஏதாவது உள்நோக்கமாக இருக்கலாமா எனவும் பொதுமக்கள் சந்தேகம் வெளியிடுகின்றனர்.



ஆரியகுளம் புத்தருக்கு வந்த ஆசை. பௌத்த கீதங்களாக மாற்றப்பட்ட சைவப் பாடல்கள்.samugammedia ஆரியகுளம் நாகவிகாரையில் சைவ பக்தி பாடல்களின் பின்னணி இசையுடன் அமைந்த தமிழ் மொழி மூல பெளத்த மத பாடல்கள் ஒலிபரப்பப்பட்டு வருகின்றது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,யாழ் பருத்தித்துறை வீதியில் அமைந்துள்ள ஆரியகுளம் நாகவிகாரையில் இடம்பெறும் வெசாக் நிகழ்வுகளில் ஒலிபெருக்கியில் சைவ பக்தி பாடல்களின் பின்னணி இசையுடன் அமைந்த தமிழ் மொழி மூல பெளத்த மத பாடல்கள் ஒலிபரப்பப்பட்டு வருகின்றது.இது தொடர்பில் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கையில், ஆரியகுளம் நாகவிகாரையில் ஒலிபெருக்கிகள் ஊடாக சைவ பக்தி பாடல்கள் போடப்பட்டு இருந்ததாகவும்  விகாரையில் சைவப் பாடல்கள் போட்டு இருக்குறாங்களே யாழ்ப்பாணத்தில சைவ மக்கள் அதிகம் என்பதால் அவர்களை ஈர்ப்பதற்காக போட்டு இருக்கின்றனர் என நினைத்ததுடன் சற்று நேரம் நின்று அந்த பாடல்களை உண்ணிப்பாக செவிமடுத்தவேளைதான்  அங்கு ஒலிபரப்பப்பட்ட பாடல்கள் சைவ பக்தி பாடல்களின் பின்னணி இசையினை வைத்து தமிழ் மொழி மூலம் மாற்றியமைக்கப்பட்ட பெளத்த மத பாடல்கள் எனவும் தெரியவந்ததாக கூறினர்.இந்நிலையில் வட மாகாணத்தில் அண்மைக்காலங்களாக இந்து சமய வழிபாட்டு தலங்கள் அழிக்கப்பட்டும் தொல்லியல் இடங்கள் எனும் பெயரில் வழிபாடுகளுக்கு தடைகள் ஏற்படுத்தப்பட்டும் பல்வேறு அடக்குமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் சைவ பக்திப்பாடல்களை பௌத்த கீதங்களாக மாற்றியமைத்து ஒலிபரப்பு செய்யப்படுகின்றமையும் ஏதாவது உள்நோக்கமாக இருக்கலாமா எனவும் பொதுமக்கள் சந்தேகம் வெளியிடுகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement