• Dec 05 2024

நிலையியற் கட்டளைக்கு முரணாக கருத்துரைத்த அர்ச்சுனா - சுட்டிக்காட்டிய ஹர்ச

Chithra / Dec 4th 2024, 4:21 pm
image

 

நாடாளுமன்றில் நிலையியற் கட்டளை முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் இன்று (04) கருத்து பரிமாற்றம் இடம்பெற்றது. 

தாம் இனவாத ரீதியாகக் கருத்து வெளியிட்டதாகத் தெரிவிக்கப்பட்டமைக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நிலையியற் கட்டளையின் ஊடாக கருத்துரைத்திருந்தார். 

இதனையடுத்து எழுந்த நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, நாடாளுமன்றிலேயே இனவாதம் உருவாக்கப்படுவதாகத் தெரிவித்தார். 

கடந்த அரசாங்கங்கள் இனரீதியாகச் செயற்பட்ட போதிலும் தற்போதைய அரசாங்கம் இனரீதியாகச் செயற்படவில்லை. 

கடந்த காலங்களிலிருந்த அரசியல் தலைவர்கள் மீதான எதிர்ப்பின் காரணமாகவே, தம்மைப் போன்ற சுயேட்சை வேட்பாளர்கள் நாடாளுமன்றுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 

எவ்வாறாயினும், நாடாளுமன்றத்துக்குள் இனவாதம் ஏற்படுத்தப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார். 

அவரை தொடர்ந்து கருத்துரைத்த சபை முதல்வர் பிமல் ரத்னாயக்க, சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிலையியற் கட்டளைகளை முறையற்ற விதத்தில் பயன்படுத்துவதன் விளைவாகவே, புதிய உறுப்பினர்களும் அதனை முறையற்ற விதத்தில் பயன்படுத்துவதாகக் குறிப்பிட்டார். 

இதனை ஆமோதித்து கருத்துரைத்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, நிலையியற் கட்டளை உரிய முறையில் பயன்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்தார். 

அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நிலையியற் கட்டளைக்கு முரணாக கருத்துரைத்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டார். 

நிலையியற் கட்டளைகள் 33 மற்றும் 32 ஆகியன வாய்மூல கேள்வியுடன் தொடர்புடையவையாகும். 

எனினும் அதனைப் பயன்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கருத்துரைப்பது முழுமையாகத் தவறான விடயமாகும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

நிலையியற் கட்டளைக்கு முரணாக கருத்துரைத்த அர்ச்சுனா - சுட்டிக்காட்டிய ஹர்ச  நாடாளுமன்றில் நிலையியற் கட்டளை முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் இன்று (04) கருத்து பரிமாற்றம் இடம்பெற்றது. தாம் இனவாத ரீதியாகக் கருத்து வெளியிட்டதாகத் தெரிவிக்கப்பட்டமைக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நிலையியற் கட்டளையின் ஊடாக கருத்துரைத்திருந்தார். இதனையடுத்து எழுந்த நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, நாடாளுமன்றிலேயே இனவாதம் உருவாக்கப்படுவதாகத் தெரிவித்தார். கடந்த அரசாங்கங்கள் இனரீதியாகச் செயற்பட்ட போதிலும் தற்போதைய அரசாங்கம் இனரீதியாகச் செயற்படவில்லை. கடந்த காலங்களிலிருந்த அரசியல் தலைவர்கள் மீதான எதிர்ப்பின் காரணமாகவே, தம்மைப் போன்ற சுயேட்சை வேட்பாளர்கள் நாடாளுமன்றுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். எவ்வாறாயினும், நாடாளுமன்றத்துக்குள் இனவாதம் ஏற்படுத்தப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார். அவரை தொடர்ந்து கருத்துரைத்த சபை முதல்வர் பிமல் ரத்னாயக்க, சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிலையியற் கட்டளைகளை முறையற்ற விதத்தில் பயன்படுத்துவதன் விளைவாகவே, புதிய உறுப்பினர்களும் அதனை முறையற்ற விதத்தில் பயன்படுத்துவதாகக் குறிப்பிட்டார். இதனை ஆமோதித்து கருத்துரைத்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, நிலையியற் கட்டளை உரிய முறையில் பயன்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்தார். அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நிலையியற் கட்டளைக்கு முரணாக கருத்துரைத்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டார். நிலையியற் கட்டளைகள் 33 மற்றும் 32 ஆகியன வாய்மூல கேள்வியுடன் தொடர்புடையவையாகும். எனினும் அதனைப் பயன்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கருத்துரைப்பது முழுமையாகத் தவறான விடயமாகும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement