2023/2024 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான அறிக்கைகளை சமர்ப்பிக்கும் திகதி எதிர்வரும் 7ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்தத் திகதியில் அல்லது அதற்கு முன் வருமான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று திணைக்களம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
முன்னதாக நவம்பர் 30ஆம் திகதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், கடந்த சில நாட்களாக ஏற்பட்ட அனர்த்த நிலைமைகளை கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், 2023/2024 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டியவர்களின் எண்ணிக்கை கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 34,696 இலட்சம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வருமான அறிக்கையை சமர்ப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் - வெளியான முக்கிய அறிவிப்பு 2023/2024 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான அறிக்கைகளை சமர்ப்பிக்கும் திகதி எதிர்வரும் 7ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.அந்தத் திகதியில் அல்லது அதற்கு முன் வருமான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று திணைக்களம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.முன்னதாக நவம்பர் 30ஆம் திகதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், கடந்த சில நாட்களாக ஏற்பட்ட அனர்த்த நிலைமைகளை கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.மேலும், 2023/2024 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டியவர்களின் எண்ணிக்கை கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 34,696 இலட்சம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.