• Nov 26 2024

மோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகளை கைது செய்யுங்கள் - வாகனங்களையும் கைப்பற்றுங்கள் - கொழும்பு பிரதான நீதவான் உத்தரவு...!

Anaath / Jun 2nd 2024, 2:41 pm
image

சட்டவிரோத வாகன இறக்குமதியில் ஈடுபட்டமோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகளை உடனடியாக கைது செய்யா வேண்டும் என கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, 

10 பில்லியன் ரூபாய்களுக்கும் அதிகமான வரிப்பணம், அரசுக்கு கிடைப்பதை தடுக்கும் வகையில் அவர்கள் செயற்பட்டதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் புலனாய்வு விசாரணைப் பிரிவுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் , மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் தகவல் அமைப்பில் சட்டவிரோதமாக தரவுகளை பதிவிட கூறிய அனைத்து அதிகாரிகளையும், அவற்றை பதிவு செய்த அதிகாரிகள் மற்றும் சட்டவிரோதமாக இந்த வாகனங்களை இறக்குமதி செய்த அதிகாரிகளையும் கைது செய்யுமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இலங்கை அரசாங்கத்திற்கு 300 மில்லியன் ரூபாய்களுக்கும் அதிகமான வரிப்பணத்தை கிடைக்கச் செய்யாத வகையில் இறக்குமதி செய்யப்பட்ட 100 மில்லியன் ரூபா பெறுமதியான ஆறு ஜீப் வண்டிகளை கைப்பற்றுமாறும் ஆணைக்குழுவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன் அவற்றை சுங்கப் பணிப்பாளர் நாயகத்திடம் ஒப்படைக்குமாறும் கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, இந்த ஆறு வாகனங்களும் தற்போது காலி, அவிசாவளை, குருவிட்ட, திருகோணமலை மற்றும் கடுவெல ஆகிய பிரதேசங்களில் வசிப்பவர்களுக்கு சொந்தமானவை என இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, நீதிமன்றில் தெரிவித்துள்ளது.

மோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகளை கைது செய்யுங்கள் - வாகனங்களையும் கைப்பற்றுங்கள் - கொழும்பு பிரதான நீதவான் உத்தரவு. சட்டவிரோத வாகன இறக்குமதியில் ஈடுபட்டமோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகளை உடனடியாக கைது செய்யா வேண்டும் என கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, 10 பில்லியன் ரூபாய்களுக்கும் அதிகமான வரிப்பணம், அரசுக்கு கிடைப்பதை தடுக்கும் வகையில் அவர்கள் செயற்பட்டதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.கொழும்பு இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் புலனாய்வு விசாரணைப் பிரிவுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அதனடிப்படையில் , மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் தகவல் அமைப்பில் சட்டவிரோதமாக தரவுகளை பதிவிட கூறிய அனைத்து அதிகாரிகளையும், அவற்றை பதிவு செய்த அதிகாரிகள் மற்றும் சட்டவிரோதமாக இந்த வாகனங்களை இறக்குமதி செய்த அதிகாரிகளையும் கைது செய்யுமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.அத்துடன் இலங்கை அரசாங்கத்திற்கு 300 மில்லியன் ரூபாய்களுக்கும் அதிகமான வரிப்பணத்தை கிடைக்கச் செய்யாத வகையில் இறக்குமதி செய்யப்பட்ட 100 மில்லியன் ரூபா பெறுமதியான ஆறு ஜீப் வண்டிகளை கைப்பற்றுமாறும் ஆணைக்குழுவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன் அவற்றை சுங்கப் பணிப்பாளர் நாயகத்திடம் ஒப்படைக்குமாறும் கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.இதேவேளை, இந்த ஆறு வாகனங்களும் தற்போது காலி, அவிசாவளை, குருவிட்ட, திருகோணமலை மற்றும் கடுவெல ஆகிய பிரதேசங்களில் வசிப்பவர்களுக்கு சொந்தமானவை என இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, நீதிமன்றில் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement