• Nov 23 2024

காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு - கடை உரிமையாளர் மீது சந்தேகம்...!

Anaath / Jun 2nd 2024, 2:36 pm
image

கம்பளை மொத்த வியாபார நிலையத்தில் பணியாற்றிய இளைஞனின் சடலம் விக்டோரியா நீர்தேக்கதிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

கம்பளை, கஹட்டா பிட்டிய, பகுதியைச் சேர்ந்த இருபத்தொரு வயதுடைய மொஹமட் ஹசன் ராஷிக் என்பவர் கடந்த 6 வருடமாக குறித்த கடையில்  பணிபுரிந்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த பகுதியில் கடையின் மொத்த வியாபாரிக்கு சொந்தமான மற்றுமொரு களஞ்சியசாலை ஒன்றும் உள்ளதோடு அந்த மொத்த வியாபாரியிடம் மோசடி செய்ததாக கூறி உயிரிழந்த இளைஞரை கடையின் உரிமையாளரும் அவரது மகனும் பலருடன் சேர்ந்து தாக்குதலில் ஈடுபட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

தாக்குதல் நடத்தப்பட்ட நாளிலிருந்து இளைஞன் காணாமல் போயிருந்த நிலையில், மறுநாள் அவர் வீட்டிற்கு செல்லாததால் கடந்த 22ஆம் திகதி இளைஞனின் தாயார் நடந்த விடயங்களைக் கூறி பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

எனினும் பொலிஸாரி்மிருந்து எந்த தகவலும் இல்லாததால் 25ஆம் தேதி மீண்டும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளில் விக்டோரியா நீர்தேக்கத்தில் இருந்து குறித்த இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கம்பளையிலிருந்து  இருந்து விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு 40 கிலோமீற்றருக்கும் அதிகமான தூரம் உள்ளதால்  குறித்த இளைஞன் அங்கு செல்ல வாய்ப்பில்லை என இளைஞனின் உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு - கடை உரிமையாளர் மீது சந்தேகம். கம்பளை மொத்த வியாபார நிலையத்தில் பணியாற்றிய இளைஞனின் சடலம் விக்டோரியா நீர்தேக்கதிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கம்பளை, கஹட்டா பிட்டிய, பகுதியைச் சேர்ந்த இருபத்தொரு வயதுடைய மொஹமட் ஹசன் ராஷிக் என்பவர் கடந்த 6 வருடமாக குறித்த கடையில்  பணிபுரிந்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த பகுதியில் கடையின் மொத்த வியாபாரிக்கு சொந்தமான மற்றுமொரு களஞ்சியசாலை ஒன்றும் உள்ளதோடு அந்த மொத்த வியாபாரியிடம் மோசடி செய்ததாக கூறி உயிரிழந்த இளைஞரை கடையின் உரிமையாளரும் அவரது மகனும் பலருடன் சேர்ந்து தாக்குதலில் ஈடுபட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தாக்குதல் நடத்தப்பட்ட நாளிலிருந்து இளைஞன் காணாமல் போயிருந்த நிலையில், மறுநாள் அவர் வீட்டிற்கு செல்லாததால் கடந்த 22ஆம் திகதி இளைஞனின் தாயார் நடந்த விடயங்களைக் கூறி பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.எனினும் பொலிஸாரி்மிருந்து எந்த தகவலும் இல்லாததால் 25ஆம் தேதி மீண்டும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளில் விக்டோரியா நீர்தேக்கத்தில் இருந்து குறித்த இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.இந்நிலையில், கம்பளையிலிருந்து  இருந்து விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு 40 கிலோமீற்றருக்கும் அதிகமான தூரம் உள்ளதால்  குறித்த இளைஞன் அங்கு செல்ல வாய்ப்பில்லை என இளைஞனின் உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement