• Apr 28 2024

பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரானுக்கு எதிராக கைது உத்தரவு..!samugammedia

Sharmi / Jun 22nd 2023, 9:54 am
image

Advertisement

ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான்கான் கைது செய்யப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து கடந்த மே மாதம் நடைபெற்ற வன்முறைப் போராட்டம் தொடா்பான வழக்கில், அவருக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத கைது உத்தரவை பிறப்பித்துள்ளது.

லாகூா் பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றமே நேற்று முன்தினம் இந்த உத்தரவை  பிறப்பித்துள்ளது.

போராட்டத்தின்போது ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் – நவாஸ் கட்சியின் அலுவலம் மற்றும் ஒரு கன்டெய்னா் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடா்பாக, இம்ரான் கான் உள்ளிட்ட 6 பேரை கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக குறித்து நீதிமன்ற அதிகாரி ஒருவா் தெரிவித்துள்ளார்.

இம்ரான் கான் தனது பிரதமா் பதவியை இழந்ததிலிருந்து, நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களில் அவா் மீது 100 க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

அவற்றில் ஒரு ஊழல் வழக்கில் அவரை ஊழல் தடுப்பு அதிகாரிகள் இஸ்லாமாபாத் உயா்நீதிமன்றத்தில் கடந்த மாதம் 9 ஆம் திகதி கைது செய்தனா். எனினும், அவரை உச்சநீதிமன்றம் பின்னா் விடுவித்தது.

இதற்கிடையே, இம்ரான் கைதுக்கு எதிா்ப்பு தெரிவித்து அவரது கட்சி ஆதரவாளா்கள் மே 9 ஆம் திகதியும், 10 ஆம் திகதியும் வன்முறைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரானுக்கு எதிராக கைது உத்தரவு.samugammedia ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான்கான் கைது செய்யப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து கடந்த மே மாதம் நடைபெற்ற வன்முறைப் போராட்டம் தொடா்பான வழக்கில், அவருக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத கைது உத்தரவை பிறப்பித்துள்ளது. லாகூா் பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றமே நேற்று முன்தினம் இந்த உத்தரவை  பிறப்பித்துள்ளது.போராட்டத்தின்போது ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் – நவாஸ் கட்சியின் அலுவலம் மற்றும் ஒரு கன்டெய்னா் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடா்பாக, இம்ரான் கான் உள்ளிட்ட 6 பேரை கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக குறித்து நீதிமன்ற அதிகாரி ஒருவா் தெரிவித்துள்ளார்.இம்ரான் கான் தனது பிரதமா் பதவியை இழந்ததிலிருந்து, நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களில் அவா் மீது 100 க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.அவற்றில் ஒரு ஊழல் வழக்கில் அவரை ஊழல் தடுப்பு அதிகாரிகள் இஸ்லாமாபாத் உயா்நீதிமன்றத்தில் கடந்த மாதம் 9 ஆம் திகதி கைது செய்தனா். எனினும், அவரை உச்சநீதிமன்றம் பின்னா் விடுவித்தது.இதற்கிடையே, இம்ரான் கைதுக்கு எதிா்ப்பு தெரிவித்து அவரது கட்சி ஆதரவாளா்கள் மே 9 ஆம் திகதியும், 10 ஆம் திகதியும் வன்முறைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

Advertisement