• May 11 2024

மே தினத்தில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் விசேட அறிவிப்பை வெளியிடவுள்ள ரணில்..! அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு

Chithra / Apr 28th 2024, 11:05 am
image

Advertisement

 

உத்தேச ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் மே தின கூட்டத்தின்போது விசேட அறிவிப்பு ஒன்றை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிடவுள்ளதாக தெரியவருகின்றது.

அன்றைய தினத்தில் ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளிக்கும் அரசியல் கட்சிகள் மே தின மேடையில் ஏறவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசிய கட்சியின் மே தின கூட்டம் புதன்கிழமை 2 மணிக்கு கொழும்பு - மருதானை பகுதியில் இடம்பெறவுள்ளது. 

சுமார் 50 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் ஐக்கிய தேசிய கட்சியின்  மே தின கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்று கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார  தெரிவித்தார்.

அதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் மே தின கூட்டத்தில் பங்கேற்குமாறு பல அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், 

இவ்வாறு பங்கேற்கும் கட்சிகளுடன் ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்தி உருவாக்கப்படவுள்ள பரந்துபட்ட அரசியல் கூட்டணி உருவாக்கப்படும் எனவும் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

மே தினத்தில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் விசேட அறிவிப்பை வெளியிடவுள்ள ரணில். அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு  உத்தேச ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் மே தின கூட்டத்தின்போது விசேட அறிவிப்பு ஒன்றை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிடவுள்ளதாக தெரியவருகின்றது.அன்றைய தினத்தில் ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளிக்கும் அரசியல் கட்சிகள் மே தின மேடையில் ஏறவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசிய கட்சியின் மே தின கூட்டம் புதன்கிழமை 2 மணிக்கு கொழும்பு - மருதானை பகுதியில் இடம்பெறவுள்ளது. சுமார் 50 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் ஐக்கிய தேசிய கட்சியின்  மே தின கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்று கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார  தெரிவித்தார்.அதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் மே தின கூட்டத்தில் பங்கேற்குமாறு பல அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், இவ்வாறு பங்கேற்கும் கட்சிகளுடன் ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்தி உருவாக்கப்படவுள்ள பரந்துபட்ட அரசியல் கூட்டணி உருவாக்கப்படும் எனவும் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement