• Apr 04 2025

புத்தளத்தில் தென்னை மரங்களுக்கு "வெண்ணிற ஈ" நோய்த் தாக்கம் - விளைச்சல் குறைவடைந்ததாக மக்கள் விசனம்!

Tharun / May 10th 2024, 7:04 pm
image

புத்தளம் மாவட்டத்தில் பல பகுதிகளில் உள்ள  தென்னைகளுக்கு "வெண்ணிற ஈ நோய்த் தாக்கம்"ஏற்பட்டுள்ளதினால் தெங்கு செய்கையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,  இந்த நோய்த் தாக்கம் காரணமாக தாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் தென்னையில் இருந்து எதிர் பார்த்த விளைச்சலைப் பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெங்கு செய்கையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.


 இதேவேளை ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டு அந்நியச் செலவும் குறைந்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

தென்னை இலைகளின் பச்சையம் இல்லாமல் நாளுக்கு நாள் தென்னை மரங்கள் பழுதடைந்து வருவதுடன் தேங்காய்களின் விளைச்சலும் குறைந்துள்ளதாக தெங்கு செய்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.


முன்னர் ஒரு ஏக்கரில் 1000 முதல் 1500 வரை தேங்காய்களை பறித்த தாங்கள் தற்போது ஐநூறு தேங்காய்களை கூட பறிக்கக முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்

எனவே இந்த நோயைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெங்கு செய்கையாளர்கள் கோரிக்கை விடுகின்றனர்.


இதேவேளை, புத்தளம் மாவட்டத்தில் கற்பிட்டி, முந்தல் மற்றும் புத்தளம் ஆகிய பிரதேச செயலக பிரிவிலுள்ள பகுதிகள் தென்னைகள் வெண் புள்ளி நோயினால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக கற்பிட்டி பிரதேச செயலக தெங்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் ஹிஜாஸ் மரைக்கார் தெரிவித்தார்.

இந்த நோயை கட்டுப்படுத்தும் வகையில் தெங்கு பயிர்ச் செய்கை சபையினால் பயனாளிகளுக்கு இலவசமாக வேப்பெண்ணையும் தெளிப்பதற்காக கருவிகளையும் வழங்கி வருவதுடன் சில மருந்துகளும் சிபார்சு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

புத்தளத்தில் தென்னை மரங்களுக்கு "வெண்ணிற ஈ" நோய்த் தாக்கம் - விளைச்சல் குறைவடைந்ததாக மக்கள் விசனம் புத்தளம் மாவட்டத்தில் பல பகுதிகளில் உள்ள  தென்னைகளுக்கு "வெண்ணிற ஈ நோய்த் தாக்கம்"ஏற்பட்டுள்ளதினால் தெங்கு செய்கையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,  இந்த நோய்த் தாக்கம் காரணமாக தாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் தென்னையில் இருந்து எதிர் பார்த்த விளைச்சலைப் பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெங்கு செய்கையாளர்கள் குறிப்பிடுகின்றனர். இதேவேளை ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டு அந்நியச் செலவும் குறைந்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.தென்னை இலைகளின் பச்சையம் இல்லாமல் நாளுக்கு நாள் தென்னை மரங்கள் பழுதடைந்து வருவதுடன் தேங்காய்களின் விளைச்சலும் குறைந்துள்ளதாக தெங்கு செய்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.முன்னர் ஒரு ஏக்கரில் 1000 முதல் 1500 வரை தேங்காய்களை பறித்த தாங்கள் தற்போது ஐநூறு தேங்காய்களை கூட பறிக்கக முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்எனவே இந்த நோயைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெங்கு செய்கையாளர்கள் கோரிக்கை விடுகின்றனர்.இதேவேளை, புத்தளம் மாவட்டத்தில் கற்பிட்டி, முந்தல் மற்றும் புத்தளம் ஆகிய பிரதேச செயலக பிரிவிலுள்ள பகுதிகள் தென்னைகள் வெண் புள்ளி நோயினால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக கற்பிட்டி பிரதேச செயலக தெங்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் ஹிஜாஸ் மரைக்கார் தெரிவித்தார்.இந்த நோயை கட்டுப்படுத்தும் வகையில் தெங்கு பயிர்ச் செய்கை சபையினால் பயனாளிகளுக்கு இலவசமாக வேப்பெண்ணையும் தெளிப்பதற்காக கருவிகளையும் வழங்கி வருவதுடன் சில மருந்துகளும் சிபார்சு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Advertisement

Advertisement

Advertisement