• Sep 05 2025

தமிழகத்திலிருந்து வந்த கலைஞர்கள்; நல்லூர் சிவகுரு ஆதீனத்தில் இடம்பெற்ற வள்ளி கும்மி நடனம்!

Chithra / Sep 5th 2025, 12:14 pm
image

தமிழகத்தில் இருந்து வருகை தந்த கலைஞர்களின் வள்ளி கும்மி நடனமானது நேற்றையதினம் நல்லூர் சிவகுரு ஆதீனத்தில் இடம்பெற்றது.

நேற்றையதினம் தமிழகத்திலிருந்து காங்கேசன்துறை ஊடாக 150க்கும் அதிகமானோர் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர். 

இவ்வாறு வருகை தந்தவர்களில் 65 கலைஞர்கள் இந்த வள்ளி கும்மி நடனத்தை ஆற்றினார்கள்.

இரு நாடுகளுக்கு இடையிலான இன நல்லுறவை வலுப்படுத்தும் நோக்கிலும் தென்னிந்தியாவின் பாரம்பரிய கலையை ஈழத்து மக்களிடமும் கொண்டு  சேர்க்கும் முகமாகவும் இந்த நடனம் ஆற்றப்பட்டது.

சிவகுரு ஆதீனத்தினத்தினர்,  குரல் அற்றவர்களின் குரல் அமைப்பினர் பல நூற்றுக்கணக்கான ரசிகர்கள் இதில் கலந்து கொண்டனர்.


தமிழகத்திலிருந்து வந்த கலைஞர்கள்; நல்லூர் சிவகுரு ஆதீனத்தில் இடம்பெற்ற வள்ளி கும்மி நடனம் தமிழகத்தில் இருந்து வருகை தந்த கலைஞர்களின் வள்ளி கும்மி நடனமானது நேற்றையதினம் நல்லூர் சிவகுரு ஆதீனத்தில் இடம்பெற்றது.நேற்றையதினம் தமிழகத்திலிருந்து காங்கேசன்துறை ஊடாக 150க்கும் அதிகமானோர் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர். இவ்வாறு வருகை தந்தவர்களில் 65 கலைஞர்கள் இந்த வள்ளி கும்மி நடனத்தை ஆற்றினார்கள்.இரு நாடுகளுக்கு இடையிலான இன நல்லுறவை வலுப்படுத்தும் நோக்கிலும் தென்னிந்தியாவின் பாரம்பரிய கலையை ஈழத்து மக்களிடமும் கொண்டு  சேர்க்கும் முகமாகவும் இந்த நடனம் ஆற்றப்பட்டது.சிவகுரு ஆதீனத்தினத்தினர்,  குரல் அற்றவர்களின் குரல் அமைப்பினர் பல நூற்றுக்கணக்கான ரசிகர்கள் இதில் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement