• Feb 04 2025

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த மேலும் பல தகவல்களை வழங்க தயாராகும் அசாத் மௌலானா

Chithra / Feb 3rd 2025, 8:00 am
image

 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து செனல் 4 அலைவரிசைக்கு தகவல்களை வழங்கிய அசாத் மெளலானா என்றழைக்கப்படும் மொஹமட் மஹிலார் மொஹமட் ஹன்ஸீர் மேலும் தகவல்களை வழங்க தயாராகவுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

எனினும் அசாத் மௌலானா நாடு திரும்புவது தொடர்பில் உறுதியான தீர்மானம் எதனையும் இதுவரை எடுக்கவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

அசாத் மௌலானா அரசியல் தஞ்சம் கோரி வெளிநாட்டில் தங்கியுள்ளார். 

அசாத் மௌலானா, சுயவிருப்பின் பேரில் நாடு திரும்பி தாமாக முன்வந்து உயிர்த்த ஞாயிறு விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க தயாராகவிருப்பதாக சட்டவல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த மேலும் பல தகவல்களை வழங்க தயாராகும் அசாத் மௌலானா  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து செனல் 4 அலைவரிசைக்கு தகவல்களை வழங்கிய அசாத் மெளலானா என்றழைக்கப்படும் மொஹமட் மஹிலார் மொஹமட் ஹன்ஸீர் மேலும் தகவல்களை வழங்க தயாராகவுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எனினும் அசாத் மௌலானா நாடு திரும்புவது தொடர்பில் உறுதியான தீர்மானம் எதனையும் இதுவரை எடுக்கவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர். அசாத் மௌலானா அரசியல் தஞ்சம் கோரி வெளிநாட்டில் தங்கியுள்ளார். அசாத் மௌலானா, சுயவிருப்பின் பேரில் நாடு திரும்பி தாமாக முன்வந்து உயிர்த்த ஞாயிறு விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க தயாராகவிருப்பதாக சட்டவல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement