• Nov 08 2024

கொழும்பில் 800 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல்...! 05 மில்லியன் அபராதம் விதிப்பு...!samugammedia

Sharmi / Dec 22nd 2023, 3:51 pm
image

கொழும்பு மாநகரில் ஏப்ரல் 26ஆம் திகதி முதல் டிசம்பர் 15ஆம் திகதி வரை அமுல்படுத்தப்பட்ட விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தில் 1,788 டெங்கு நுளம்பு புழுக்கள் உள்ள இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.

டெங்கு தொற்றின் போக்கு தொடர்பில் சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

808 பேருக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அக்காலப்பகுதியில் 5,704,500 ரூபா அரசாங்கத்திடம் அறவிடப்பட்டுள்ளதாகவும் ருவன் விஜயமுனி குறிப்பிட்டார்.

குறித்த காலப்பகுதியில் கொழும்பில் உள்ள 180,000 வீடுகளில் 116,013 வீடுகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

சோதனைக்கு உட்படுத்தப்பட்ட வீடுகளில் 16,850 வீடுகள் டெங்கு பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

டெங்கு தொற்றைக் கட்டுப்படுத்த சுகாதார அமைச்சும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவும் சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி மேலும் தெரிவித்தார்.

கொழும்பில் 800 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல். 05 மில்லியன் அபராதம் விதிப்பு.samugammedia கொழும்பு மாநகரில் ஏப்ரல் 26ஆம் திகதி முதல் டிசம்பர் 15ஆம் திகதி வரை அமுல்படுத்தப்பட்ட விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தில் 1,788 டெங்கு நுளம்பு புழுக்கள் உள்ள இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.டெங்கு தொற்றின் போக்கு தொடர்பில் சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.808 பேருக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அக்காலப்பகுதியில் 5,704,500 ரூபா அரசாங்கத்திடம் அறவிடப்பட்டுள்ளதாகவும் ருவன் விஜயமுனி குறிப்பிட்டார்.குறித்த காலப்பகுதியில் கொழும்பில் உள்ள 180,000 வீடுகளில் 116,013 வீடுகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.சோதனைக்கு உட்படுத்தப்பட்ட வீடுகளில் 16,850 வீடுகள் டெங்கு பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.டெங்கு தொற்றைக் கட்டுப்படுத்த சுகாதார அமைச்சும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவும் சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement