யாழ்ப்பாணம் - நெல்லியடி பகுதியில் வாள்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நெல்லியடி மாலுசந்தி பகுதியில் உள்ள வீடொன்றில் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய நேற்று (21) தீவிர தேடுதல் நடத்தப்பட்டது.
இதன் போது வீட்டில் இருந்து நான்கு வாள்களும் சட்டவிரோதமான சிகரெட் பெட்டிகளும் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் 38 வயதான சந்தேக நபரொருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இதே வேளை யாழ்ப்பாணம் - துன்னாலை குடவத்தை பகுதியில் போதைப்பொருள், பெருந்தொகை பணம் மற்றும் பெருமளவான தொலைபேசிகளுடன் 43 வயதுடைய பெண்ணொருவர் நெல்லியடி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரிடம் இருந்து 620 மில்லிகிராம் அளவுள்ள ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதுடன் 678,900 ரூபா பணமும் 16 கையடக்க தொலைபேசிகளும் சந்தேகநபரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த பணம் போதைப்பொருள் விற்பனை மூலம் கிடைத்திருக்கலாமெனவும் காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
நெல்லியடியில் ஒருவர் கைது - மீட்கப்பட்ட 4 வாள்கள்.samugammedia யாழ்ப்பாணம் - நெல்லியடி பகுதியில் வாள்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.நெல்லியடி மாலுசந்தி பகுதியில் உள்ள வீடொன்றில் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய நேற்று (21) தீவிர தேடுதல் நடத்தப்பட்டது.இதன் போது வீட்டில் இருந்து நான்கு வாள்களும் சட்டவிரோதமான சிகரெட் பெட்டிகளும் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் 38 வயதான சந்தேக நபரொருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த இதே வேளை யாழ்ப்பாணம் - துன்னாலை குடவத்தை பகுதியில் போதைப்பொருள், பெருந்தொகை பணம் மற்றும் பெருமளவான தொலைபேசிகளுடன் 43 வயதுடைய பெண்ணொருவர் நெல்லியடி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரிடம் இருந்து 620 மில்லிகிராம் அளவுள்ள ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதுடன் 678,900 ரூபா பணமும் 16 கையடக்க தொலைபேசிகளும் சந்தேகநபரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த பணம் போதைப்பொருள் விற்பனை மூலம் கிடைத்திருக்கலாமெனவும் காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.