• Dec 26 2024

சாரதி மற்றும் நடத்துநர் மீது தாக்குதல் - யாழ். பேருந்து நிலையத்தில் பதற்றம்

Chithra / Dec 25th 2024, 2:48 pm
image

 


யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தில் சாரதி மற்றும் நடத்துநர் மீது இனந்தெரியாத இருவர் தாக்குதல் நடாத்திய நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காரைநகர் இ.போ.ச. சாலை முகாமையாளர் தெரிவித்தார்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

காரைநகர் சாலையின் 786 வழித்தட பேருந்து சேவை சாரதி, யாழ்ப்பாணம் நோக்கி சென்று யாழ். பேருந்து நிலையத்தில் பேருந்தினை தரித்துள்ளார்.

தொடர்ந்து தேனீர்சாலைக்கு தனது பேருந்து நடத்துநருடனும் யாழ். சாலை நடத்துநருடனும் சென்றுள்ளனர்.

இந்நிலையில்  தீடீரென தேனீர்சாலைக்குள் வந்த இருவர் சாரதியின் தலையில்  போத்தல் ஒன்றினால் அடித்துள்ளார். 

இதேநேரம் யாழ் சாலை நடத்துநர் தாக்குதலை தடுக்க முற்பட்ட பொழுது அவரை கத்தியால் வெட்டுவதற்கு கலைத்து சென்ற நிலையில், அவரது கையில் காயம் ஏற்பட்டுள்ளது. 

தொடர்ந்து பொலிசாரை கண்டவுடன் இருவரும் தப்பித்து சென்றுள்ளனர்.

உடனடியாக காயமடைந்த இருவரும் ஏனைய சாரதிகள், நடத்துநர் உதவியுடன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் தப்பியோடிய பொழுது சந்தேகநபரை பொலிசார் கைது செய்யாது பார்த்து கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, சிறிது நேரம் பேரூந்து சேவை இடம்பெறாமல் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட பொழுதும்,பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேகநபர்களை கைது செய்வதாக வழங்கிய உத்தரவுக்கமைய சேவைகள் இடம்பெறுவதாக காரைநகர் சாலை முகாமையாளர் தெரிவித்தார்.

சாரதி மற்றும் நடத்துநர் மீது தாக்குதல் - யாழ். பேருந்து நிலையத்தில் பதற்றம்  யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தில் சாரதி மற்றும் நடத்துநர் மீது இனந்தெரியாத இருவர் தாக்குதல் நடாத்திய நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காரைநகர் இ.போ.ச. சாலை முகாமையாளர் தெரிவித்தார்.சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,காரைநகர் சாலையின் 786 வழித்தட பேருந்து சேவை சாரதி, யாழ்ப்பாணம் நோக்கி சென்று யாழ். பேருந்து நிலையத்தில் பேருந்தினை தரித்துள்ளார்.தொடர்ந்து தேனீர்சாலைக்கு தனது பேருந்து நடத்துநருடனும் யாழ். சாலை நடத்துநருடனும் சென்றுள்ளனர்.இந்நிலையில்  தீடீரென தேனீர்சாலைக்குள் வந்த இருவர் சாரதியின் தலையில்  போத்தல் ஒன்றினால் அடித்துள்ளார். இதேநேரம் யாழ் சாலை நடத்துநர் தாக்குதலை தடுக்க முற்பட்ட பொழுது அவரை கத்தியால் வெட்டுவதற்கு கலைத்து சென்ற நிலையில், அவரது கையில் காயம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பொலிசாரை கண்டவுடன் இருவரும் தப்பித்து சென்றுள்ளனர்.உடனடியாக காயமடைந்த இருவரும் ஏனைய சாரதிகள், நடத்துநர் உதவியுடன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.இந்நிலையில் தப்பியோடிய பொழுது சந்தேகநபரை பொலிசார் கைது செய்யாது பார்த்து கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.இதனையடுத்து, சிறிது நேரம் பேரூந்து சேவை இடம்பெறாமல் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட பொழுதும்,பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேகநபர்களை கைது செய்வதாக வழங்கிய உத்தரவுக்கமைய சேவைகள் இடம்பெறுவதாக காரைநகர் சாலை முகாமையாளர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement