இலங்கையில் பாதாள உலகக் குழுவினர் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளால் சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (20) பாராளுமன்றில் தெரிவித்தார்
பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திர பண்டார எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விபரங்களை அம்பலப்படுத்தினார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனைகளில் கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களின் பட்டியலை அமைச்சர் சமர்ப்பித்தார்.
கெஹெல்பத்தர பத்மே (மந்தினு பத்மசிறி): 50 மில்லியன் ரூபாய் பெறுமதியான காணிகள் மற்றும் பாதி பூர்த்தியான கட்டிடங்கள்.
தெஹிபாலா (ஷெஹான் சத்சர): 200 மில்லியன் ரூபாய் பெறுமதியான 5 பலநாள் மீன்பிடி படகுகள் மற்றும் 50 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள்.
ஜயசிங்ககே மதுரங்க சம்பத்: வங்கி கணக்குகளில் இருந்த 73 மில்லியன் ரூபாய் உட்பட மொத்தம் 283 மில்லியன் ரூபாய் பணம் மற்றும் சொகுசு வாகனங்கள்.
ஸ்ரீயானி சந்திரலதா: 6 கோடி ரூபாய் பெறுமதியான நான்கு மாடி வீடு மற்றும் காணி.
துமிந்த தில்ருக்: 23 மில்லியன் ரூபாய் பெறுமதியான வீடு மற்றும் வாகனங்கள்.
இரோஷன் விஜேசிறி: 5 மில்லியன் ரூபாய் பெறுமதியான லொறி மற்றும் சொத்துக்கள்.
இவை தவிர பல கோடி ரூபாய் பெறுமதியான வாகனங்கள், வீடுகள் மற்றும் வெளிநாட்டு நாணயங்களும் அரசால் முடக்கப்பட்டுள்ளன.
குற்றவாளிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையிலான நெருங்கிய தொடர்புகள் குறித்து அமைச்சர் பாரிய தகவலொன்றை வெளியிட்டார்.
கைது செய்யப்பட்ட கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்டவர்களிடமிருந்து 30 தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டன.
அவற்றை ஆய்வு செய்தபோது, அவர்களுடன் தொடர்புகளைப் பேணிய மற்றும் இணைந்து செயற்பட்ட அரசியல்வாதிகள் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன.
அந்த அரசியல்வாதிகள் தொடர்பில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு, வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படுகின்றன.
முழுமையான விசாரணையின் பின்னர் அவர்களின் விபரங்கள் அடங்கிய அறிக்கை வெளியிடப்படும்," என அமைச்சர் உறுதியளித்தார்.
அக்குரேகொடையில் இடம்பெற்ற இரட்டை கொலைச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் முக்கிய முன்னேற்றத்தை எட்டியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
மீவல, ருக்கஹவெல பகுதியைச் சேர்ந்த ரூபர்ட் சுரேஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்
குற்றவாளிகளைத் தங்குமிடத்திற்கு அழைத்துச் சென்ற வாகனத்தின் உரிமையாளர் காலி பகுதியைச் சேர்ந்த வன்னி ஆரச்சிகே சிஹின தில்சர என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட வாகனம் பத்தேகமவில் எரிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதுடன், துப்பாக்கிகளை ஏற்றி வந்த மற்றொரு வாகனம் கொட்டாவ பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களைக் கைது செய்ய விரிவான தேடுதல் வேட்டை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பாதாள உலகினரின் சொத்துக்கள் முடக்கம்: அரசியல்வாதிகளுடன் தொடர்பு - எம்.பி ஆனந்த விஜேபால அதிரடித் தகவல் இலங்கையில் பாதாள உலகக் குழுவினர் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளால் சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (20) பாராளுமன்றில் தெரிவித்தார்பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திர பண்டார எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விபரங்களை அம்பலப்படுத்தினார்.கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனைகளில் கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களின் பட்டியலை அமைச்சர் சமர்ப்பித்தார். கெஹெல்பத்தர பத்மே (மந்தினு பத்மசிறி): 50 மில்லியன் ரூபாய் பெறுமதியான காணிகள் மற்றும் பாதி பூர்த்தியான கட்டிடங்கள்.தெஹிபாலா (ஷெஹான் சத்சர): 200 மில்லியன் ரூபாய் பெறுமதியான 5 பலநாள் மீன்பிடி படகுகள் மற்றும் 50 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள்.ஜயசிங்ககே மதுரங்க சம்பத்: வங்கி கணக்குகளில் இருந்த 73 மில்லியன் ரூபாய் உட்பட மொத்தம் 283 மில்லியன் ரூபாய் பணம் மற்றும் சொகுசு வாகனங்கள்.ஸ்ரீயானி சந்திரலதா: 6 கோடி ரூபாய் பெறுமதியான நான்கு மாடி வீடு மற்றும் காணி.துமிந்த தில்ருக்: 23 மில்லியன் ரூபாய் பெறுமதியான வீடு மற்றும் வாகனங்கள்.இரோஷன் விஜேசிறி: 5 மில்லியன் ரூபாய் பெறுமதியான லொறி மற்றும் சொத்துக்கள்.இவை தவிர பல கோடி ரூபாய் பெறுமதியான வாகனங்கள், வீடுகள் மற்றும் வெளிநாட்டு நாணயங்களும் அரசால் முடக்கப்பட்டுள்ளன.குற்றவாளிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையிலான நெருங்கிய தொடர்புகள் குறித்து அமைச்சர் பாரிய தகவலொன்றை வெளியிட்டார்.கைது செய்யப்பட்ட கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்டவர்களிடமிருந்து 30 தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டன. அவற்றை ஆய்வு செய்தபோது, அவர்களுடன் தொடர்புகளைப் பேணிய மற்றும் இணைந்து செயற்பட்ட அரசியல்வாதிகள் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன. அந்த அரசியல்வாதிகள் தொடர்பில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு, வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படுகின்றன. முழுமையான விசாரணையின் பின்னர் அவர்களின் விபரங்கள் அடங்கிய அறிக்கை வெளியிடப்படும்," என அமைச்சர் உறுதியளித்தார்.அக்குரேகொடையில் இடம்பெற்ற இரட்டை கொலைச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் முக்கிய முன்னேற்றத்தை எட்டியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.மீவல, ருக்கஹவெல பகுதியைச் சேர்ந்த ரூபர்ட் சுரேஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்குற்றவாளிகளைத் தங்குமிடத்திற்கு அழைத்துச் சென்ற வாகனத்தின் உரிமையாளர் காலி பகுதியைச் சேர்ந்த வன்னி ஆரச்சிகே சிஹின தில்சர என அடையாளம் காணப்பட்டுள்ளார்.குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட வாகனம் பத்தேகமவில் எரிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதுடன், துப்பாக்கிகளை ஏற்றி வந்த மற்றொரு வாகனம் கொட்டாவ பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேகநபர்களைக் கைது செய்ய விரிவான தேடுதல் வேட்டை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.