தலங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியின் கொடூரக் கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்படும் சந்தேகநபரின் விபரங்களை பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று வெளியிட்டுள்ளது.
கடந்த 2026 பெப்ரவரி 13 ஆம் திகதி இடம்பெற்ற இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் தொடர்பில் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
விசாரணைகளின் அடிப்படையில் சுமார் 44 வயது ,சுமார் 5 அடி 5 அங்குலம்,கருமை கலந்த மாநிறம்,முகத்தின் வலது பக்க தாடைக்குக் கீழே ஒரு தழும்பு காணப்படுவதாக சந்தேகநபரின் உருவ அமைப்பு விவரிக்கப்பட்டுள்ளது
குறித்த சந்தேகநபரின் தற்போதைய தோற்றம் எவ்வாறு இருக்கலாம் என்பது குறித்து AI (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படங்களை பொலிஸார் ஊடகங்களுக்கு வழங்கியுள்ளனர்.
மேற்குறிப்பிட்ட நபர் தொடர்பாக ஏதேனும் தகவல் கிடைத்தால், உடனடியாக பின்வரும் தொலைபேசி எண்களுக்குத் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்:
பிரதிப் பொலிஸ் மா அதிபர் (மேல் மாகாண வடக்கு): 071 - 8598008
பிரிவுக்குப் பொறுப்பான அதிகாரி (நுகேகொடை): 071 - 8591641
இயக்குனர் (மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவு): 071 - 859227
குற்றவாளிகளைக் கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்த இந்தத் தகவலைப் பகிருமாறு பொலிஸார் மேலும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தலங்கம இரட்டைக்கொலை: சந்தேகநபரை AI புகைப்படங்களுடன் பொலிஸார் தேடுதல் வேட்டை தலங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியின் கொடூரக் கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்படும் சந்தேகநபரின் விபரங்களை பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று வெளியிட்டுள்ளது.கடந்த 2026 பெப்ரவரி 13 ஆம் திகதி இடம்பெற்ற இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் தொடர்பில் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.விசாரணைகளின் அடிப்படையில் சுமார் 44 வயது ,சுமார் 5 அடி 5 அங்குலம்,கருமை கலந்த மாநிறம்,முகத்தின் வலது பக்க தாடைக்குக் கீழே ஒரு தழும்பு காணப்படுவதாக சந்தேகநபரின் உருவ அமைப்பு விவரிக்கப்பட்டுள்ளதுகுறித்த சந்தேகநபரின் தற்போதைய தோற்றம் எவ்வாறு இருக்கலாம் என்பது குறித்து AI (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படங்களை பொலிஸார் ஊடகங்களுக்கு வழங்கியுள்ளனர்.மேற்குறிப்பிட்ட நபர் தொடர்பாக ஏதேனும் தகவல் கிடைத்தால், உடனடியாக பின்வரும் தொலைபேசி எண்களுக்குத் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்:பிரதிப் பொலிஸ் மா அதிபர் (மேல் மாகாண வடக்கு): 071 - 8598008 பிரிவுக்குப் பொறுப்பான அதிகாரி (நுகேகொடை): 071 - 8591641இயக்குனர் (மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவு): 071 - 859227குற்றவாளிகளைக் கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்த இந்தத் தகவலைப் பகிருமாறு பொலிஸார் மேலும் கேட்டுக்கொண்டுள்ளனர்.