• Jan 11 2025

இந்த ஆட்சியிலாவது விவசாயிகளுக்கு நன்மை கிட்டவேண்டும்! மட்டு. விவசாயிகள் கோரிக்கை

Chithra / Jan 7th 2025, 12:15 pm
image

 

நெல்லினை 125 தொடக்கம் 135 ரூபாய் வரையாவது கொள்வனவு செய்தால் மாத்திரம் தான் எமது உற்பத்தி செலவிலிருந்து ஓரளவேனும் எங்களுடைய இலாபத்தை இல்லாவிட்டாலும் உற்பத்தி செலவினையாவது பெற்றுக் கொள்ள முடியும் என மட்டக்களப்பு தமிழ் விவசாய சமுகத்தின் இணைப்பாளர் சிவலிங்கம் பரமேஸ்வரநாதன் தெரிவித்தார்.

மட்டு. ஊடக அமையத்தில் நேற்று திங்கட்கிழமை (06) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மாவட்டத்தை பொருத்தவரையில் 70 விதமான மக்கள் விவசாயத்தை முன்னெடுத்து இருக்கின்ற இந்த நிலையில் 2 இலட்சத்திற்கும் அதிகமான ஏக்கர் வேளாண்மை பயிர்ச்செய்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

இருப்பினும் கடந்த ஆட்சியாளர்களை விட இந்த ஆட்சியில் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன விவசாயிகள் தொடர்பாக நெல் அறுவடை தொடங்க முன்னரே அது தொடர்பான விலை நிர்ணயத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது தொடர்பாக அவருடைய கருத்து தொட்டுச் சென்று இருக்கின்றது.

நாங்கள் இந்த ஆட்சியினை ஏற்றுக் கொள்கின்றோம் நல்ல விடயங்கள் மக்களுக்கு இலங்கையில் இடம்பெறும் குறிப்பாக விவசாயிகளுக்கு நடைபெறும் என்பதனை நாங்கள் அத்திவாரமாக கருதுகின்றோம். 

இருப்பினும் எங்களுடைய மட்டக்களப்பு மாவட்டத்தை பொருத்தவரையில் நெல் கொள்வனவு சந்தைப்படுத்தல் சபையிலே 8 களஞ்சிய சாலைகள் இருக்கின்றது. 

இருப்பினும் தற்பொழுது 3 களஞ்சியசாலைகள் யானை தாக்கத்தினால் சேதப்படுத்தப்பட்டு இருக்கின்றது. குறிப்பாக தும்பங்கேனி, கரடியனாறு மற்றும் புலிபாய்ந்தகல் போன்ற இந்த நெல் களஞ்சிய சாலைகள் சேதப்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இவற்றை புனரமைப்பு செய்வதாயின் குறைந்தபட்சம் ஒன்றரை தொடக்கம் இரண்டு இலட்சம் ரூபாய் வரை தேவைப்படுகின்றது.  இருப்பினும் அவை இன்னமும் புனரமைக்கப்படாதது ஒரு துர்ப்பாக்கிய நிலையாக நாங்கள் கருதுகின்றோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபையை பொறுத்தவரையில் ஒரே ஒரு நபரை வைத்துக் கொண்டுதான் இந்த நெல் கொள்வனவு சந்தைப்படுத்தல் சபையினை இயக்குகின்றார்கள். 

இதனை நாங்கள் ஒரு சாபக்கேடாகவே கருதுகின்றோம். உண்மையிலேயே 70 விதமான விவசாயிகள் இந்த மாவட்டத்தில் இருக்கின்ற நிலையில் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கர்களில் வேளாண்மை செய்யப்படுகின்ற நிலையில் கிட்டத்தட்ட 42 பில்லியன் ரூபா நடைமுறையில் இருக்கின்றது. 

மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாறு நாட்டினுடைய மொத்த தேசிய உற்பத்திக்கு பெருமளவான பங்கு வகிக்கும் இந்த மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபையிலே குறிப்பிட்ட ஓரிரு உத்தியோகத்தர்களை வைத்துக்கொண்டு எவ்வாறு எமது நெல்லினை கணிசமான அளவு சந்தைப்படுத்தக் கூடிய வாய்ப்பு இருக்கின்றது என்று கேள்விக்குறியாக இருக்கின்றது.

அண்மையிலே பாரிய வெள்ளம் ஏற்பட்டது அதனை தொடர்ந்து ஒரு குறுகிய வறட்சி ஏற்பட்டது இதில் மிஞ்சி கிடந்த பயிர்கள் கடந்த வாரம் பெய்த மழையினால் கதிர் ஆகி அன்னம் வாங்குகின்ற இந்த சந்தர்ப்பத்தில் எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு பின்னர் அறுவடை செய்கின்ற நிலை ஏற்பட்டிருக்கின்றது ஆகவே இதுவரைக்கும் எமது மாவட்டத்தில் இந்த நெல்லுக்கான விலை தீர்மானிக்கப்படவில்லை.

கடந்த காலங்களில் ஆட்சியாளர்கள் எங்களை ஏமாற்றிக் கொண்டு சென்றார்கள் ஆகவே இந்த ஆட்சியாளர்களை நம்பித்தான் இவ்வாறானதொரு நிலையினை எட்டி இருக்கின்றோம் காரணம் ஏற்கனவே நான் கூறியது போன்று பிரதி அமைச்சரின் கருத்தை நாங்கள் நம்பி இருக்கின்றோம். இந்த ஆட்சியும் நாட்டிலே ஒரு மறுமலர்ச்சி ஏற்படுத்தக்கூடிய வகையில் அவர்களுடைய செயற்பாடுகள் காணப்படுகின்றது.

அதேபோன்று 80 தொடக்கம் 85 ஆயிரம் ஏக்கர் வரை வேளாண்மை செய்யப்படுகின்ற திருகோணமலை மாவட்டத்தில் பிராந்திய காரியாலயம் அமைக்கப்பட்டிருக்கின்றது. 

இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு லட்சம் ஏக்கர்கள் வேளாண்மை செய்கின்ற இந்த நிலையில் எந்த ஒரு காரியாலயமும் நெல் கொள்வனவுக்காக அமைக்கப்படவில்லை. 

எனவே இது மனவேதனையை தருகின்றது. தொடர்ந்து நமது மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளை ஏமாற்றுகின்ற நிலையாகவே நாங்கள் கடந்த ஆட்சியாளர்களை பார்த்திருக்கின்றோம்.

ஆகவே இந்த ஆட்சியாளர்கள் தொடங்கி இருக்கின்ற இந்த புத்தாண்டில் ஆவது நல்லதொரு முடிவினை விவசாயிகளுக்கு தர வேண்டும்.

கடந்த காலங்களில் இடைத்தரகர்களின் ஊடாக செல்வந்தர்கள் வந்து அரசாங்கத்தின் விலை நிர்ணயத்துக்கு அப்பால் அவர்களுடைய தீர்மானத்தைக் கொண்டு எங்கள் மீது திணித்து ஏற்றுக்கொள்ள முடியாத விலையிலே அந்த நெல்லை கொள்வனம் செய்கின்றார்கள் மாபியாக்கள் எனவே இதனால் தான் தற்பொழுது அரசாங்கம் கூட வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்யக்கூடிய ஒரு துப்பாக்கிய நிலைக்கு அரசு தள்ளப்பட்டு இருக்கின்றது.

ஆகவே இதனை கருத்தில் கொண்டு இவ்வாண்டுக்கான அறுவடையினை மேற்கொள்ளுகின்ற சந்தர்ப்பத்தில் உடன் வெட்டுகின்ற நெல்லினை சுமார் 110 தொடக்கம் 115 ரூபாய் வரையாவது கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் ஒரு தீர்மானத்தை கொண்டு வர வேண்டும்.

காய்ந்த நெல்லினை 125 தொடக்கம் 135 ரூபாய் வரையாவது கொள்வனவு செய்தால் மாத்திரம் தான் எமது உற்பத்தி செலவிலிருந்து ஓரளவேனும் எங்களுடைய வருமானத்தை இல்லாவிட்டாலும் உற்பத்தி செலவினையாவது பெற்றுக் கொள்ள முடியும் என்பதனை இந்த இடத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.

ஆகவே இந்த நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற துர்பாக்கிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்படக்கூடாது என்பதற்காக அரசாங்கத்திடம் ஒரு பணிவான வேண்டுகோளை விடுத்துக் கொள்கின்றோம். 

அறுவடை ஆரம்பிக்க முன்னரே தற்பொழுது புத்தளம் மாவட்டத்தில் அறுவடை ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது ஆகவே அங்கு ஒரு விலை சூத்திரம் சொல்லப்பட்டு இருக்கிறது அது எந்த அளவிற்கு நாட்டிலே நடைமுறைப்படுத்தப்படும் என்பது கேள்விக்குறியாக இருக்கின்றது. 

இருப்பினும் நாங்கள் குறிப்பிட்டது போன்று 110 தொடக்கம் 115 ரூபாய் உடன்வெட்டுக்கும் காய்ந்த நெல்லுக்கு 125 தொடக்கம் 135 ரூபாய் ஆவது நமது மாவட்டத்தில் நடைமுறைக்கு வரும் வண்ணம் அரசாங்கம் இதனை முன்கூட்டியே விலை சூத்திரத்தினை அறிமுகப்படுத்த வேண்டும் என்பதனை கேட்டுக் கொள்கின்றோம்.

இந்த ஆட்சியிலாவது விவசாயிகளுக்கு நன்மை கிட்டவேண்டும் மட்டு. விவசாயிகள் கோரிக்கை  நெல்லினை 125 தொடக்கம் 135 ரூபாய் வரையாவது கொள்வனவு செய்தால் மாத்திரம் தான் எமது உற்பத்தி செலவிலிருந்து ஓரளவேனும் எங்களுடைய இலாபத்தை இல்லாவிட்டாலும் உற்பத்தி செலவினையாவது பெற்றுக் கொள்ள முடியும் என மட்டக்களப்பு தமிழ் விவசாய சமுகத்தின் இணைப்பாளர் சிவலிங்கம் பரமேஸ்வரநாதன் தெரிவித்தார்.மட்டு. ஊடக அமையத்தில் நேற்று திங்கட்கிழமை (06) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,மட்டக்களப்பு மாவட்டத்தை பொருத்தவரையில் 70 விதமான மக்கள் விவசாயத்தை முன்னெடுத்து இருக்கின்ற இந்த நிலையில் 2 இலட்சத்திற்கும் அதிகமான ஏக்கர் வேளாண்மை பயிர்ச்செய்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.இருப்பினும் கடந்த ஆட்சியாளர்களை விட இந்த ஆட்சியில் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன விவசாயிகள் தொடர்பாக நெல் அறுவடை தொடங்க முன்னரே அது தொடர்பான விலை நிர்ணயத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது தொடர்பாக அவருடைய கருத்து தொட்டுச் சென்று இருக்கின்றது.நாங்கள் இந்த ஆட்சியினை ஏற்றுக் கொள்கின்றோம் நல்ல விடயங்கள் மக்களுக்கு இலங்கையில் இடம்பெறும் குறிப்பாக விவசாயிகளுக்கு நடைபெறும் என்பதனை நாங்கள் அத்திவாரமாக கருதுகின்றோம். இருப்பினும் எங்களுடைய மட்டக்களப்பு மாவட்டத்தை பொருத்தவரையில் நெல் கொள்வனவு சந்தைப்படுத்தல் சபையிலே 8 களஞ்சிய சாலைகள் இருக்கின்றது. இருப்பினும் தற்பொழுது 3 களஞ்சியசாலைகள் யானை தாக்கத்தினால் சேதப்படுத்தப்பட்டு இருக்கின்றது. குறிப்பாக தும்பங்கேனி, கரடியனாறு மற்றும் புலிபாய்ந்தகல் போன்ற இந்த நெல் களஞ்சிய சாலைகள் சேதப்படுத்தப்பட்டு இருக்கின்றது.இவற்றை புனரமைப்பு செய்வதாயின் குறைந்தபட்சம் ஒன்றரை தொடக்கம் இரண்டு இலட்சம் ரூபாய் வரை தேவைப்படுகின்றது.  இருப்பினும் அவை இன்னமும் புனரமைக்கப்படாதது ஒரு துர்ப்பாக்கிய நிலையாக நாங்கள் கருதுகின்றோம்.மட்டக்களப்பு மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபையை பொறுத்தவரையில் ஒரே ஒரு நபரை வைத்துக் கொண்டுதான் இந்த நெல் கொள்வனவு சந்தைப்படுத்தல் சபையினை இயக்குகின்றார்கள். இதனை நாங்கள் ஒரு சாபக்கேடாகவே கருதுகின்றோம். உண்மையிலேயே 70 விதமான விவசாயிகள் இந்த மாவட்டத்தில் இருக்கின்ற நிலையில் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கர்களில் வேளாண்மை செய்யப்படுகின்ற நிலையில் கிட்டத்தட்ட 42 பில்லியன் ரூபா நடைமுறையில் இருக்கின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாறு நாட்டினுடைய மொத்த தேசிய உற்பத்திக்கு பெருமளவான பங்கு வகிக்கும் இந்த மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபையிலே குறிப்பிட்ட ஓரிரு உத்தியோகத்தர்களை வைத்துக்கொண்டு எவ்வாறு எமது நெல்லினை கணிசமான அளவு சந்தைப்படுத்தக் கூடிய வாய்ப்பு இருக்கின்றது என்று கேள்விக்குறியாக இருக்கின்றது.அண்மையிலே பாரிய வெள்ளம் ஏற்பட்டது அதனை தொடர்ந்து ஒரு குறுகிய வறட்சி ஏற்பட்டது இதில் மிஞ்சி கிடந்த பயிர்கள் கடந்த வாரம் பெய்த மழையினால் கதிர் ஆகி அன்னம் வாங்குகின்ற இந்த சந்தர்ப்பத்தில் எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு பின்னர் அறுவடை செய்கின்ற நிலை ஏற்பட்டிருக்கின்றது ஆகவே இதுவரைக்கும் எமது மாவட்டத்தில் இந்த நெல்லுக்கான விலை தீர்மானிக்கப்படவில்லை.கடந்த காலங்களில் ஆட்சியாளர்கள் எங்களை ஏமாற்றிக் கொண்டு சென்றார்கள் ஆகவே இந்த ஆட்சியாளர்களை நம்பித்தான் இவ்வாறானதொரு நிலையினை எட்டி இருக்கின்றோம் காரணம் ஏற்கனவே நான் கூறியது போன்று பிரதி அமைச்சரின் கருத்தை நாங்கள் நம்பி இருக்கின்றோம். இந்த ஆட்சியும் நாட்டிலே ஒரு மறுமலர்ச்சி ஏற்படுத்தக்கூடிய வகையில் அவர்களுடைய செயற்பாடுகள் காணப்படுகின்றது.அதேபோன்று 80 தொடக்கம் 85 ஆயிரம் ஏக்கர் வரை வேளாண்மை செய்யப்படுகின்ற திருகோணமலை மாவட்டத்தில் பிராந்திய காரியாலயம் அமைக்கப்பட்டிருக்கின்றது. இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு லட்சம் ஏக்கர்கள் வேளாண்மை செய்கின்ற இந்த நிலையில் எந்த ஒரு காரியாலயமும் நெல் கொள்வனவுக்காக அமைக்கப்படவில்லை. எனவே இது மனவேதனையை தருகின்றது. தொடர்ந்து நமது மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளை ஏமாற்றுகின்ற நிலையாகவே நாங்கள் கடந்த ஆட்சியாளர்களை பார்த்திருக்கின்றோம்.ஆகவே இந்த ஆட்சியாளர்கள் தொடங்கி இருக்கின்ற இந்த புத்தாண்டில் ஆவது நல்லதொரு முடிவினை விவசாயிகளுக்கு தர வேண்டும்.கடந்த காலங்களில் இடைத்தரகர்களின் ஊடாக செல்வந்தர்கள் வந்து அரசாங்கத்தின் விலை நிர்ணயத்துக்கு அப்பால் அவர்களுடைய தீர்மானத்தைக் கொண்டு எங்கள் மீது திணித்து ஏற்றுக்கொள்ள முடியாத விலையிலே அந்த நெல்லை கொள்வனம் செய்கின்றார்கள் மாபியாக்கள் எனவே இதனால் தான் தற்பொழுது அரசாங்கம் கூட வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்யக்கூடிய ஒரு துப்பாக்கிய நிலைக்கு அரசு தள்ளப்பட்டு இருக்கின்றது.ஆகவே இதனை கருத்தில் கொண்டு இவ்வாண்டுக்கான அறுவடையினை மேற்கொள்ளுகின்ற சந்தர்ப்பத்தில் உடன் வெட்டுகின்ற நெல்லினை சுமார் 110 தொடக்கம் 115 ரூபாய் வரையாவது கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் ஒரு தீர்மானத்தை கொண்டு வர வேண்டும்.காய்ந்த நெல்லினை 125 தொடக்கம் 135 ரூபாய் வரையாவது கொள்வனவு செய்தால் மாத்திரம் தான் எமது உற்பத்தி செலவிலிருந்து ஓரளவேனும் எங்களுடைய வருமானத்தை இல்லாவிட்டாலும் உற்பத்தி செலவினையாவது பெற்றுக் கொள்ள முடியும் என்பதனை இந்த இடத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.ஆகவே இந்த நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற துர்பாக்கிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்படக்கூடாது என்பதற்காக அரசாங்கத்திடம் ஒரு பணிவான வேண்டுகோளை விடுத்துக் கொள்கின்றோம். அறுவடை ஆரம்பிக்க முன்னரே தற்பொழுது புத்தளம் மாவட்டத்தில் அறுவடை ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது ஆகவே அங்கு ஒரு விலை சூத்திரம் சொல்லப்பட்டு இருக்கிறது அது எந்த அளவிற்கு நாட்டிலே நடைமுறைப்படுத்தப்படும் என்பது கேள்விக்குறியாக இருக்கின்றது. இருப்பினும் நாங்கள் குறிப்பிட்டது போன்று 110 தொடக்கம் 115 ரூபாய் உடன்வெட்டுக்கும் காய்ந்த நெல்லுக்கு 125 தொடக்கம் 135 ரூபாய் ஆவது நமது மாவட்டத்தில் நடைமுறைக்கு வரும் வண்ணம் அரசாங்கம் இதனை முன்கூட்டியே விலை சூத்திரத்தினை அறிமுகப்படுத்த வேண்டும் என்பதனை கேட்டுக் கொள்கின்றோம்.

Advertisement

Advertisement

Advertisement