• Jan 26 2025

சம்மாந்துறையில் ஊடகவியலாளர் மீது தாக்குதல்; உழைக்கும் ஊடகவியலாளர்கள் சங்கம் பொலிஸ் மா அதிபருக்கு அவசர கடிதம்..!

Sharmi / Jan 4th 2025, 9:16 am
image

சம்மாந்துறை நைனாகாடு பிரதேசத்தில் உள்ளூர் ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கடுமையான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர்கள் சங்கம் பொலிஸ் மா அதிபருக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது

இது தொடர்பாக இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் துமிந்த சம்பத் மற்றும் செயலாளர் ஆகியவர்கள் ஒப்பமட்டு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில்,

அம்பாறை, சம்மாந்துறை பிரதேசத்தில் அம்பாறை பிராந்திய ஊடகவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் அச்சல உபேந்திரா மீது சிலர் தாக்குதல் நடத்தியதுடன், அவரது கமரா உபகரணங்களும் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் எமக்கு தகவல் கிடைத்துள்ளது.

குறித்த பிரதேசத்தில் இடம்பெற்று வரும் மணல் அகழ்வு மோசடி தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் தொழில்சார் கடமையில் ஈடுபட்டிருந்த போதே அவர் இந்த துரதிஷ்டவசமான கதியை எதிர்கொண்டுள்ளார்.

இலங்கை நிபுணத்துவ ஊடகவியலாளர்கள் சங்கம் இச்சம்பவத்தை வெறுப்புடன் கண்டிப்பதோடு, ஊடகவியலாளர்களை குறிவைத்து தொடரும் இவ்வாறான செயற்பாடுகள் ஜனநாயக சமூகத்தில் மிகவும் இழிவான நிலையாகும் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறது.

ஊடகவியலாளர்கள் படுகொலைகள், ஊடகவியலாளர்கள் காணாமற்போதல், ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள், ஊடக நிறுவனங்கள் எரிப்பு போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக இதுவரை நீதி கிடைக்காத சமூகத்தில் இவ்வாறான துரதிஷ்டவசமான நிகழ்வுகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவது மிகவும் வருந்தத்தக்கது.

எனவே, இச்சம்பவம் குறித்து பாரபட்சமற்ற விரைவான விசாரணை நடத்தி, சம்பவத்துடன் தொடர்புடைய தரப்பினர் மீது சட்டத்தை கடுமையாக அமுல்படுத்தி, சம்பவத்தை எதிர்கொண்ட அச்சல உபேந்திராவுக்கு நீதி கிடைக்கவும், தேவையான பின்னணியை தயார் செய்யவும் கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர்

சம்மாந்துறையில் ஊடகவியலாளர் மீது தாக்குதல்; உழைக்கும் ஊடகவியலாளர்கள் சங்கம் பொலிஸ் மா அதிபருக்கு அவசர கடிதம். சம்மாந்துறை நைனாகாடு பிரதேசத்தில் உள்ளூர் ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கடுமையான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர்கள் சங்கம் பொலிஸ் மா அதிபருக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதுஇது தொடர்பாக இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் துமிந்த சம்பத் மற்றும் செயலாளர் ஆகியவர்கள் ஒப்பமட்டு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில்,அம்பாறை, சம்மாந்துறை பிரதேசத்தில் அம்பாறை பிராந்திய ஊடகவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் அச்சல உபேந்திரா மீது சிலர் தாக்குதல் நடத்தியதுடன், அவரது கமரா உபகரணங்களும் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் எமக்கு தகவல் கிடைத்துள்ளது.குறித்த பிரதேசத்தில் இடம்பெற்று வரும் மணல் அகழ்வு மோசடி தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் தொழில்சார் கடமையில் ஈடுபட்டிருந்த போதே அவர் இந்த துரதிஷ்டவசமான கதியை எதிர்கொண்டுள்ளார்.இலங்கை நிபுணத்துவ ஊடகவியலாளர்கள் சங்கம் இச்சம்பவத்தை வெறுப்புடன் கண்டிப்பதோடு, ஊடகவியலாளர்களை குறிவைத்து தொடரும் இவ்வாறான செயற்பாடுகள் ஜனநாயக சமூகத்தில் மிகவும் இழிவான நிலையாகும் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறது.ஊடகவியலாளர்கள் படுகொலைகள், ஊடகவியலாளர்கள் காணாமற்போதல், ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள், ஊடக நிறுவனங்கள் எரிப்பு போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக இதுவரை நீதி கிடைக்காத சமூகத்தில் இவ்வாறான துரதிஷ்டவசமான நிகழ்வுகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவது மிகவும் வருந்தத்தக்கது.எனவே, இச்சம்பவம் குறித்து பாரபட்சமற்ற விரைவான விசாரணை நடத்தி, சம்பவத்துடன் தொடர்புடைய தரப்பினர் மீது சட்டத்தை கடுமையாக அமுல்படுத்தி, சம்பவத்தை எதிர்கொண்ட அச்சல உபேந்திராவுக்கு நீதி கிடைக்கவும், தேவையான பின்னணியை தயார் செய்யவும் கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர்

Advertisement

Advertisement

Advertisement