• Jul 05 2025

யாழில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது தாக்குதல்

Chithra / Jul 5th 2025, 7:55 am
image


யாழ்ப்பாணம் - மானிப்பாய் நகர் பகுதியில் கடை ஒன்றுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது இனந்தெரியாத குழு ஒன்று தாக்குதல் மேற்கொண்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

நேற்றுமாலை இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த ஐவர் கொண்ட குழு மேற்படி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது தாக்குதல் நடாத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளது.

இது குறித்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. 

மானிப்பாய் பொலிஸ் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது தாக்குதல் யாழ்ப்பாணம் - மானிப்பாய் நகர் பகுதியில் கடை ஒன்றுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது இனந்தெரியாத குழு ஒன்று தாக்குதல் மேற்கொண்டுள்ளது.இது குறித்து மேலும் தெரியவருகையில்,நேற்றுமாலை இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த ஐவர் கொண்ட குழு மேற்படி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது தாக்குதல் நடாத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளது.இது குறித்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. மானிப்பாய் பொலிஸ் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement