பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையில் உருவாக்கப்பட உள்ள மிகப் பெரிய அரசியல் கூட்டணியை சீர்குலைத்து, பிளவுப்படுத்த ஒரு அணிக்கு அரசியல் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாக அந்த கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த அணியினர் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணி அமைக்கப்படும் நடவடிக்கைகளை சீர்குலைப்பதற்காக கட்சிக்குள் இருந்தும் வெளியில் இருந்தும் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர்.
இந்த செயலில் ஈடுபட்டுள்ள நபர்கள் தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் பல பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் தலைமையிடம் ஏற்கனவே முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்த நபர்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் அவர்கள் கட்சியின் தலைமையிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகிறது.
இந்த நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காது போனால், முக்கியமான சந்திர்ப்பம் ஒன்றில், இவர்கள் புதிய கூட்டணிக்கு மட்டுமல்லாது கட்சிக்கும் அரசியல் ரீதியான பாரிய சேதத்தை ஏற்படுத்துவார்கள் என சம்பந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.
கட்சிக்குள் பிரச்சினைகளை ஏற்படுத்தும் இந்த நபர்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளனர். எதிர்காலத்தில் இந்த நபர்கள் குறித்து நாட்டுக்கும், கட்சியினருக்கும் தெரியப்படுத்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தயாராகி வருகின்றனர்.
எதிர்க்கட்சி கூட்டணியை பிளவுப்படுத்த முயற்சி: ஐ.மக்கள் சக்தியின் எம்.பிக்கள் முறையீடு.samugammedia பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையில் உருவாக்கப்பட உள்ள மிகப் பெரிய அரசியல் கூட்டணியை சீர்குலைத்து, பிளவுப்படுத்த ஒரு அணிக்கு அரசியல் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாக அந்த கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த அணியினர் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணி அமைக்கப்படும் நடவடிக்கைகளை சீர்குலைப்பதற்காக கட்சிக்குள் இருந்தும் வெளியில் இருந்தும் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர்.இந்த செயலில் ஈடுபட்டுள்ள நபர்கள் தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் பல பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் தலைமையிடம் ஏற்கனவே முறைப்பாடு செய்துள்ளனர்.இந்த நபர்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் அவர்கள் கட்சியின் தலைமையிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகிறது.இந்த நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காது போனால், முக்கியமான சந்திர்ப்பம் ஒன்றில், இவர்கள் புதிய கூட்டணிக்கு மட்டுமல்லாது கட்சிக்கும் அரசியல் ரீதியான பாரிய சேதத்தை ஏற்படுத்துவார்கள் என சம்பந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.கட்சிக்குள் பிரச்சினைகளை ஏற்படுத்தும் இந்த நபர்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளனர். எதிர்காலத்தில் இந்த நபர்கள் குறித்து நாட்டுக்கும், கட்சியினருக்கும் தெரியப்படுத்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தயாராகி வருகின்றனர்.