• Nov 24 2024

மக்களே அவதானம்- சாமிமலை பகுதியில் இப்படியும் நடக்கிறது..!

Sharmi / Oct 11th 2024, 11:10 am
image

கிராம சேவை அதிகாரி ஒருவரால் சாமிமலை பகுதியில் பெண்ணொருவரின் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மத்தியமலை நாட்டின்.மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட  சாமிமலை பகுதியில் உள்ள கிராம சேவை அதிகாரி ஒருவர்  சாமிமலை பகுதியை சேர்ந்த   பெண் ஒருவர் குடும்ப வறுமையின் காரணமாக மத்திய கிழக்கு நாடு ஒன்றான லெபனான் நாட்டுக்கு தொழில் நிமித்தமாக சென்ற பெண் ஒருவரிடம்,  காணாமல் போன  தேசிய அடையாள அட்டை பெற்று தருவதாகவும் மேலும்  குறித்த பெண்ணுக்கு அஸ்வெசும நிவாரணம் பெற்று தருவதாகவும் கூறி  பெரும் தொகை பணத்தை  பெற்றதாகவும்  ஆனால்  ஒரு வருடம் கடந்த நிலையிலும்  அடையாள அட்டையும் கிடைக்கவில்லை,  அஸ் வெசும நிவாரணமும் கிடைக்கவில்லை எனவும்  பாதிக்கப்பட்ட பெண் புகார் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு நாட்டில் பல்வேறு கஸ்ட்டங்களை துன்ப துயரங்களையும் சுமந்து  வரும் நிலையில் ஒரு அரச அதிகாரி தன்னை  இப்படி ஏமாற்றியது மிகவும் வேதனையளிப்பதாகவும்  அடையாள அட்டை இல்லாத காரணத்தால் தனது பாஸ்போர்ட்  போன்ற மேலதிக ஆவணங்களை.புதுப்பிக்க முடியாது உள்ளதாகவும், எனவே இது குறித்து இலங்கையில் உள்ள அதிகாரிகள் உடன் கவனம் செலுத்த முன் வர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.


மக்களே அவதானம்- சாமிமலை பகுதியில் இப்படியும் நடக்கிறது. கிராம சேவை அதிகாரி ஒருவரால் சாமிமலை பகுதியில் பெண்ணொருவரின் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,மத்தியமலை நாட்டின்.மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட  சாமிமலை பகுதியில் உள்ள கிராம சேவை அதிகாரி ஒருவர்  சாமிமலை பகுதியை சேர்ந்த   பெண் ஒருவர் குடும்ப வறுமையின் காரணமாக மத்திய கிழக்கு நாடு ஒன்றான லெபனான் நாட்டுக்கு தொழில் நிமித்தமாக சென்ற பெண் ஒருவரிடம்,  காணாமல் போன  தேசிய அடையாள அட்டை பெற்று தருவதாகவும் மேலும்  குறித்த பெண்ணுக்கு அஸ்வெசும நிவாரணம் பெற்று தருவதாகவும் கூறி  பெரும் தொகை பணத்தை  பெற்றதாகவும்  ஆனால்  ஒரு வருடம் கடந்த நிலையிலும்  அடையாள அட்டையும் கிடைக்கவில்லை,  அஸ் வெசும நிவாரணமும் கிடைக்கவில்லை எனவும்  பாதிக்கப்பட்ட பெண் புகார் தெரிவித்துள்ளார்.மத்திய கிழக்கு நாட்டில் பல்வேறு கஸ்ட்டங்களை துன்ப துயரங்களையும் சுமந்து  வரும் நிலையில் ஒரு அரச அதிகாரி தன்னை  இப்படி ஏமாற்றியது மிகவும் வேதனையளிப்பதாகவும்  அடையாள அட்டை இல்லாத காரணத்தால் தனது பாஸ்போர்ட்  போன்ற மேலதிக ஆவணங்களை.புதுப்பிக்க முடியாது உள்ளதாகவும், எனவே இது குறித்து இலங்கையில் உள்ள அதிகாரிகள் உடன் கவனம் செலுத்த முன் வர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement