• May 17 2024

மக்களே அவதானம்..! தீவிரமடையும் மற்றுமோர் நோய்த் தாக்கம்..!samugammedia

Sharmi / Jul 31st 2023, 12:11 pm
image

Advertisement

இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 56,000ஐ தாண்டியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இதுவரை பதிவாகியுள்ள நோயாளர்களில் 50 வீதமானவர்கள் மேல் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், கண்டி, கேகாலை, குருநாகல் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களிலும் கணிசமான எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அந்த பிரிவு கூறுகிறது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் நளீன் ஆரியரத்ன,

 கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் கணிசமான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

டெங்கு நுளம்பு பரவும் அபாயம் தொடர்வதாக வைத்தியர் நளீன் ஆரியரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.


மக்களே அவதானம். தீவிரமடையும் மற்றுமோர் நோய்த் தாக்கம்.samugammedia இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 56,000ஐ தாண்டியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.இதுவரை பதிவாகியுள்ள நோயாளர்களில் 50 வீதமானவர்கள் மேல் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், கண்டி, கேகாலை, குருநாகல் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களிலும் கணிசமான எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அந்த பிரிவு கூறுகிறது.இது தொடர்பில் கருத்து தெரிவித்த தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் நளீன் ஆரியரத்ன, கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் கணிசமான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.டெங்கு நுளம்பு பரவும் அபாயம் தொடர்வதாக வைத்தியர் நளீன் ஆரியரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement