• Nov 24 2024

மக்களே அவதானம்...! நாடளாவிய ரீதியில் டெங்கு தாக்கம் அதிதீவிரமடைந்த மாவட்டமாக யாழ்ப்பாணம் அடையாளம்...!samugammedia

Sharmi / Jan 10th 2024, 10:45 am
image

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வருவதுடன் சில பகுதிகளில் உயிரிழப்புக்களும் பதிவாகி வருகின்றது.

இவ்வாறானதொரு நிலையில்,  நாடளாவிய ரீதியில் டெங்குத் தொற்றின் 'அதிதீவிர நோய் நிலை' அடைந்த மாவட்டமாக யாழ்ப்பாணம் தரப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது.

டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவினரின் தகவல்களின் அடிப்படையில், கடந்த முதலாம் திகதி தொடக்கம் 8ஆம் திகதி வரையான எட்டு நாள்களில் யாழ்ப்பாணத்தில் 448 பேர் டெங்குத் தொற்றுடன் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.

இலங்கையில் இவ்வருடம் மாவட்ட அடிப்படையில் அதிக டெங்கு தொற்றாளர்கள் பதிவான மாவட்டமாக யாழ்ப்பாணமே காணப்படு கின்றது.

அதேவேளை, கடந்த வருடம் அதிதீவிர தொற்று நிலையைக் கொண்டிருந்த கொழும்பில் இவ்வருடம் 284 டெங்குத் தொற்றாளர்களே இனங்காணப்பட் டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில் யாழ் போதனா வைத்தியசாலையில் 258 பேரும், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில்  93 பேரும். ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையில் 35 பேரும், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில்  33 பேரும், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில்  29 பேருமாக குறித்த எட்டு நாள்களில் டெங்கு நோய்ப்பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களது எண்ணிக்கை 448ஆக பதிவாகியுள்ளது.

அதேவேளை,  டெங்கு தாக்கத்திலிருந்து விடுபடுவதற்கு அனைவரும் தத்தம் வீட்டுச் சூழல் மற்றும் சுற்றுச் சூழலில் மழை நீர் தேங்காது பார்த்துக் கொள்வதன் ஊடாகவும். மழை நீர் தேங்கும் பொருட்களை அகற்றியும் , புற்கள் பற்றைகளை துப்புரவு செய்வதன் ஊடாக உங்களையும், சமூகத்தையும் டெங்கு அபாயத்தில் இருந்து பாதுகாக்க முடியும் என சுகாதாரத் தரப்பினர் அறிவுறுத்தியுள்ளனர்.

 

மக்களே அவதானம். நாடளாவிய ரீதியில் டெங்கு தாக்கம் அதிதீவிரமடைந்த மாவட்டமாக யாழ்ப்பாணம் அடையாளம்.samugammedia நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வருவதுடன் சில பகுதிகளில் உயிரிழப்புக்களும் பதிவாகி வருகின்றது.இவ்வாறானதொரு நிலையில்,  நாடளாவிய ரீதியில் டெங்குத் தொற்றின் 'அதிதீவிர நோய் நிலை' அடைந்த மாவட்டமாக யாழ்ப்பாணம் தரப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது.டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவினரின் தகவல்களின் அடிப்படையில், கடந்த முதலாம் திகதி தொடக்கம் 8ஆம் திகதி வரையான எட்டு நாள்களில் யாழ்ப்பாணத்தில் 448 பேர் டெங்குத் தொற்றுடன் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். இலங்கையில் இவ்வருடம் மாவட்ட அடிப்படையில் அதிக டெங்கு தொற்றாளர்கள் பதிவான மாவட்டமாக யாழ்ப்பாணமே காணப்படு கின்றது. அதேவேளை, கடந்த வருடம் அதிதீவிர தொற்று நிலையைக் கொண்டிருந்த கொழும்பில் இவ்வருடம் 284 டெங்குத் தொற்றாளர்களே இனங்காணப்பட் டுள்ளனர்.யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில் யாழ் போதனா வைத்தியசாலையில் 258 பேரும், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில்  93 பேரும். ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையில் 35 பேரும், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில்  33 பேரும், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில்  29 பேருமாக குறித்த எட்டு நாள்களில் டெங்கு நோய்ப்பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களது எண்ணிக்கை 448ஆக பதிவாகியுள்ளது.அதேவேளை,  டெங்கு தாக்கத்திலிருந்து விடுபடுவதற்கு அனைவரும் தத்தம் வீட்டுச் சூழல் மற்றும் சுற்றுச் சூழலில் மழை நீர் தேங்காது பார்த்துக் கொள்வதன் ஊடாகவும். மழை நீர் தேங்கும் பொருட்களை அகற்றியும் , புற்கள் பற்றைகளை துப்புரவு செய்வதன் ஊடாக உங்களையும், சமூகத்தையும் டெங்கு அபாயத்தில் இருந்து பாதுகாக்க முடியும் என சுகாதாரத் தரப்பினர் அறிவுறுத்தியுள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement