• Nov 22 2024

இலங்கையில் பாரியளவில் அதிகரித்த சீனியின் விலை..!

Chithra / Jan 10th 2024, 10:29 am
image

 

வட் வரி 18 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் சந்தையில் ஒரு கிலோகிராம் சிகப்பு சீனியின் விலை 415 ரூபாயாக அதிகரித்துள்ளதாக சீனி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

பல்வத்த மற்றும் செவனகல சீனி தொழிற்சாலைகளில் இருந்து மாத்திரமே சிகப்பு சீனி உற்பத்தி செய்யப்படுவதுடன், 

நேற்று (09) நடைபெற்ற டெண்டரின் பின்னர் ஒரு கிலோகிராம் சீனி 322 ரூபாயிற்கு விற்பனை செய்யப்பட்டது.

இதன்படி ஒரு கிலோகிராம் சீனியின் விலை 390 ரூபாயைத் தாண்டியுள்ளதாக வர்த்தகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதனுடன் தமது இலாபத்தையும் சேர்த்த பின்னர் ஒரு கிலோ சிகப்பு சீனியின் விலை 415 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேவேளை, இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் வெள்ளை சீனி சந்தையில் 265 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. 

அந்த சர்க்கரைக்கு 50 ரூபாய் மட்டுமே இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது.

இதன்படி, சிகப்பு சீனியின் விலையை விட இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் விலை சுமார் 150 ரூபாய் குறைந்துள்ளதாக வர்த்தகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கையில் பாரியளவில் அதிகரித்த சீனியின் விலை.  வட் வரி 18 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் சந்தையில் ஒரு கிலோகிராம் சிகப்பு சீனியின் விலை 415 ரூபாயாக அதிகரித்துள்ளதாக சீனி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.பல்வத்த மற்றும் செவனகல சீனி தொழிற்சாலைகளில் இருந்து மாத்திரமே சிகப்பு சீனி உற்பத்தி செய்யப்படுவதுடன், நேற்று (09) நடைபெற்ற டெண்டரின் பின்னர் ஒரு கிலோகிராம் சீனி 322 ரூபாயிற்கு விற்பனை செய்யப்பட்டது.இதன்படி ஒரு கிலோகிராம் சீனியின் விலை 390 ரூபாயைத் தாண்டியுள்ளதாக வர்த்தகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.அதனுடன் தமது இலாபத்தையும் சேர்த்த பின்னர் ஒரு கிலோ சிகப்பு சீனியின் விலை 415 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.இதேவேளை, இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் வெள்ளை சீனி சந்தையில் 265 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அந்த சர்க்கரைக்கு 50 ரூபாய் மட்டுமே இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது.இதன்படி, சிகப்பு சீனியின் விலையை விட இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் விலை சுமார் 150 ரூபாய் குறைந்துள்ளதாக வர்த்தகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement